இஸ்லாம் ஓர் அழகிய மார்க்கம்
நாயகத் திருமேனி அஹ்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி அபூஜஹல் கூறினான் – பனிஹாஷிம் எனும் குலத்தில் தோன்றிய நீர் அருவருப்பான முகத்தை கொண்டுள்ளீர்.
அதற்கு அஹ்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்தார்கள்: நீ உண்மையானவன், நீ கூறியது உண்மை தான் எனினும் அளவுக்கு மீறி ஒழுக்கமற்ற முறையில் கூறியுள்ளாய்.
ஹஜ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அண்ணலார் அவர்களைக் கண்டதும் கூறினார்கள்: நிறைவு பெற்ற என் சூரியனே! தாங்கள் கிழக்குக்கு மட்டுமல்ல மேற்குக்கும் ஒளியூட்டக் கூடியவர்களாய் உள்ளீர்கள், தங்கள் பிரகாசம் அனைத்து திக்கும் ஒளிரட்டும்.
நாயகக் கோமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்தார்கள் – நண்பரே!
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மையே, நீங்கள் இந்த பயனற்ற உலகத்தை விட்டு
மீட்சி அடைந்து விட்டீர்.
அங்கே குழுமி இருந்தவர்கள் கேட்டார்கள் – படைப்பினங்களின் தலைவரே! தாங்கள் இரண்டு எதிர்மறையான விஷயங்களையும் உண்மை என கூறியது எதனால்?
நான் இறைவனால் மெருகூட்டப்பட்ட தூய கண்ணாடியாய் உள்ளேன். கறுப்பு மற்றும் வெள்ளை இனத்தவர்கள் அனைவரும், யார் எப்படி உள்ளனரோ, அப்படியே என்னில் பார்க்கின்றார்கள்.
யார் முகத்திற்கு முன்னால் கண்ணாடி உள்ளதோ அவர் தன்னுடைய நல்லதையும் கெட்டதையும் அதில் காணத்தான் செய்வார்.
[மஸ்னவி ஷரீப்]
அஷ்ரப்அங்கே குழுமி இருந்தவர்கள் கேட்டார்கள் – படைப்பினங்களின் தலைவரே! தாங்கள் இரண்டு எதிர்மறையான விஷயங்களையும் உண்மை என கூறியது எதனால்?
நான் இறைவனால் மெருகூட்டப்பட்ட தூய கண்ணாடியாய் உள்ளேன். கறுப்பு மற்றும் வெள்ளை இனத்தவர்கள் அனைவரும், யார் எப்படி உள்ளனரோ, அப்படியே என்னில் பார்க்கின்றார்கள்.
யார் முகத்திற்கு முன்னால் கண்ணாடி உள்ளதோ அவர் தன்னுடைய நல்லதையும் கெட்டதையும் அதில் காணத்தான் செய்வார்.
[மஸ்னவி ஷரீப்]
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home