4 January 2013

. கவிபேரரசு வைரமுத்து

. கவிபேரரசு வைரமுத்து



கேள்வி-பதில் . கவிபேரரசு வைரமுத்து
''
தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?''
''
உங்கள் கேள்வி என் மனதுக்குள் சின்னதொரு தீக்குச்சி கிழித்தது; சிந்திக்கவைத்தது. நல்ல பதிலுக்குக் கொஞ்சம் உழைக்க வேண்டி இருந்தது.
நானறிந்த புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டு மக்கள்தொகை 7 கோடியே 21 லட்சம் மற்றும் சொச்சம். இந்த 7 கோடிக்குச் சற்றொப்ப மக்கள்தொகை கொண்ட வளர்ந்த நாடுகளில் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு இந்திய மதிப்பில் எவ்வளவு என்று ஆராய்ந்தேன்.
6.8
கோடி மக்கள்தொகை கொண்ட இத்தாலி அரசு ஆண்டுக்கு 60 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுகிறது.
6.53
கோடி மக்கள்தொகை கொண்ட பிரான்ஸ் 83 லட்சத்து 64 ஆயிரம் கோடி செலவிடுகிறது.
6.2
கோடி மக்கள்தொகை கொண்ட பிரிட்டன் 64 லட்சத்து 73 ஆயிரம் கோடி செலவிடுகிறது.
6.18
கோடி மக்கள்தொகை கொண்ட ஜெர்மனி 86 லட்சத்து 53 ஆயிரம் கோடி செலவிடுகிறது.
ஆனால், 7.2 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டுக்கு அதிகபட்சமாக 98 ஆயிரத்து 213.85 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்படுகிறது.
அவையெல்லாம் நாடுகள், நம்முடையது மாநிலம் என்றபோதிலும் மக்கள்தொகையில் சற்றொப்ப நிகர் என்பதனால், இந்த ஒப்பீடு தவிர்க்க முடியாததாகிறது.
எவ்வளவு செலவழிக்கிறோம் என்பதை விடவும் எவ்வளவு சென்று சேர்கிறது என்பதும் கருதத்தக்கது. இன்னும் நாம் பாதைகளை முழுக்கக் கட்டமைக்க வேண்டும்; பயணம் நெடுந்தூரம்
!''நன்றி விகடன்


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home