10 January 2013

அமைச்சர்களின் செலவினத் தகவல்கள் தெரியுமா?

அமைச்சர்களின் செலவினத் தகவல்கள் தெரியுமா?

அமைச்சர்கள் பிரதியமைச்சர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், தொலைபேசி கொடுப்பனவுகள், வாகனங்கள் மற்றும் அதற்காக வழங்கப்படும் எரிபொருள் தொடர்பான தகவல்களை பாராளுமன்றத்தில் அரசாங்கம் நேற்று வெளியிட்டது.

இதன்பிரகாரம் அமைச்சரொருவருக்கு மாதாந்த சம்பளமாக ரூபா 65 ஆயிரமும் பிரதியமைச்சர் ஒருவருக்கு ரூபா 63,500 உம், வழங்கப்படுவதோடு அதற்கு மேலதிகமாக தொலைபேசி கொடுப்பனவாக மாதமொன்றுக்கு ரூபா 50 ஆயிரமும் வாகனங்கள் அதற்கான எரிபொருளும் வழங்கப்படுவதாகவும் அரசு அறிவித்தது.

அமைச்சர் ஒருவருக்கும் பிரதியமைச்சர் ஒருவருக்கும் சம்பளத்திற்கு மேலதிகமாக இரண்டு அலுவலகத் தொலைபேசிகளுக்கான 20 ஆயிரம் ரூபாவும் கடமையின் நிமித்தம் 2 வீட்டுத் தொலைபேசிகளுக்காக 20 ஆயிரம் ரூபாவும் கையடக்க தொலைபேசிக்கென 10 ஆயிரம் ரூபாவும் என மொத்தமாக கொடுப்பனவாக 50 ஆயிரம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

அத்தோடு 3 வாகனங்கள் மற்றும் மாவட்ட அடிப்படையில் அவற்றுக்கான எரிபொருள் போன்ற சலுகைகளையும் அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் அனுபவிக்கின்றனர்.

மேல் மாகாணத்திற்கு வெளியே அமைந்துள்ள மாவட்டத்தை பிரதிநிதித்துவம் படுத்தும் அமைச்சர்களின் மற்றும் பிரதியமைச்சர்களின் பெற்றோல் வாகனமொன்றுக்கு 750 லீற்றரும் டீசல் வாகனமொன்றுக்கு 600 லீற்றர் எரிபொருள் வழங்கப்படுவதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதேபோன்று மேல் மாகாண மாவட்டங்களை பிரதிநிதித்துவம் படுத்தும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்களின் பெற்றோல் வாகனமொன்றுக்கு 600 லீற்றரும் டீசல் வாகனமொன்றுக்கு 500 லீற்றரும் எரிபொருள் வழங்கப்படுவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களுக்கு மாவட்ட அடிப்படையில் வித்தியாசப்படும் எரிபொருள் கொடுப்பனவு 2 ஆயிரம் ரூபா கையடக்கத் தொலைபேசி கொடுப்பனவு பாராளுமன்றத்திற்கு வருகைக்கான 500 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home