மார்பக புற்றுநோய் பாதிப்பு சென்னையில் அதிகம்
சென்னை : தமிழகத்திலேயே சென்னையில்தான் மார்பக புற்றுநோயால் அதிகம் பேர்
பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் வீரமணி
தெரிவித்தார்.
ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு டீன் கனகசபை தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர்கள் நாராயணசாமி, சிவசுப்பிரமணியம், ஆர்எம்ஓக்கள் ஆனந்த் பிரதாப், சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதாரத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். அதன்பின், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வெளியிட்டார்.
சுகாதாரத்துறை அமைச்சர் வீரமணி பேசுகையில், ‘‘இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மார்பக புற்றுநோயால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலேயே சென்னை பெண்கள் அதிக அளவில் இந்நோயால் பாதிக்கப் பட்டு வருகின்றனர். சரியான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்காததே முக்கிய காரணம். தற்போது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும், அரசு மருத்துவமனைக்கு இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் சார்பில் புற்றுநோய் சிகிச்சைக்கு நவீன கருவி வழங்கப்பட்டுள்ளது. இதனை பெண்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார். நிகழ்ச்சியில் கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இணை இயக்குனர் வெங்கட்ராமன், டாக்டர்கள் மாலதி, கலைச்செல்வி, சண்முககுமார், போஸ், பாலசுப்பிரமணியன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.
எக்ஸ்ட்ரா தகவல்
உலக அளவில் ஆண்டுதோறும் 1 கோடியே 40 லட்சம் பெண்கள், இந்தியாவில் மட்டும் 1.15 லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
தாய்மை என்பது புனிதமானது, ஆனால் இன்றைய கால வசதி படைத்த பெண்கள் குழந்தைக்கு பால் கொடுப்பதை கேவலமாக நினைத்து ஆவின்பால் மற்ற இதர வகையானவற்றை கொடுக்கிறார்கள். இவைகளை தவிர்த்தால் மார்பக புற்று நோயினை தவிர்க்கலாம்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home