27 October 2013

'உண்மையிலேயே மனசாட்சி உறுத்துமா?''



''தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் கெவின் கார்டர். சூடானில் நிலவிய கடும் பஞ்சத்தைப் புகைப்படம் எடுக்கச் சென்றார். எலும்பும் தோலுமாக இளைத்துப்போய் உயிரின் கடைசிச் சொட்டுடுடன் கிடக்கும் குழந்தையின் அருகில் இரை ருசிக்க ஒரு கழுகு காத்திருக்கும் காட்சியைப் புகைப்படம் எடுத்தார். அந்தப் படம் அவருக்குப் புலிட்சர் விருதினைப் பெற்றுத் தந்தது. ஒருபுறம் பாராட்டுக்கள் குவிந்தாலும்,'வறுமையின் உச்சத்தில் தவிக்கும் ஓர் ஏழைக் குழந்தையைக் காப்பாற்றாமல், புகைப்படம் எடுப்பதற்காக இன்னொரு கழுகைப் போல காத்துக்கிடந்தார்' என்ற விமர்சனமும் அவர் மீது வைக்கப்பட்டது. இந்த விமர்சனங்களும் சூடானில் தான் நேரில் கண்ட காட்சிகளின் கொடூரமும் கார்டரின் மனதை உறுத்திக்கொண்டே இருக்க, புலிட்சர் விருது வாங்கிய இரண்டே மாதங்களில் தனது 33-வது வயதில் தற்கொலை செய்துகொண்டார். அதீதமான மனிதநேயம், சென்சிட்டிவ்வான மனம், உலகின் துயரங்களை நேரில் கண்டதால் ஏற்பட்ட கடும் மனஉளைச்சல் ஒரு படைப்பாளியைத் தற்கொலைக்கே இட்டுச் சென்றது. அந்தக் குழந்தையின் கதி என்னவாயிற்று என்று கெவின் கார்டர் உட்பட உலகத்தில் யாருக்கும் தெரியவில்லை!''

-
நா.மலர், நாகப்பட்டினம்.
நானே கேள்வி.. நானே பதில்!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home