27 October 2013

சினிமாவும் , மீடியாவும் எப்படியான விஷத்தை மக்கள் மனங்களில் பரப்புகிறது என்பதற்கான சிறு உதாரணம் .




சினிமாவும் , மீடியாவும் எப்படியான விஷத்தை மக்கள் மனங்களில் பரப்புகிறது என்பதற்கான சிறு உதாரணம் . கண்டிப்பாக படித்து பாருங்கள் -

முசுலீம் தீவிரவாதி
-----------------------------

கடந்த ஞாயிறன்று எனது சித்தப்பா இல்லம் சென்றிருந்தேன் .மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தோழர்களில் ஒருவர் அவர்.அவர் வீட்டு மாடியில் இசுலாமியர் ஒருவர் பத்தாண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறார்.திமுகவின் மாவட்ட பிரதிநிதி அவர்.

எனது சித்தப்பா பேரன் தீபாவளியையொட்டி பொம்மை துப்பாக்கி வைத்து ரோல் கேப் வைத்து சுட்டு விளையாடுவதை பார்த்து அந்த இசுலாமிய நண்பரின் ஏழு வயது மகனும் கேட்டு அடம்பிடிதிருக்கான்.அவரும் வாங்கி கொடுத்துள்ளார்.

மாலையில் ஏன் சித்தப்பா வீட்டிற்கு சென்று பேசிகொண்டிருக்கையில் அவரும் வந்தார்.மூவரும் பேசிகொண்டிருந்தோம்.அப்போது அந்த முசுலீம் நண்பரின் மகன் துப்பாக்கியை வைத்து விளையாடி கொண்டு வர

உடனே எனது சித்தப்பா "என்ன பாய் இப்போவே ட்ரைனிங் கொடுக்கிறீங்க போல என்று சிறிது கொண்டே சொன்னதும் அவர் முகம் மாறிவிட்டது.

எனக்கும் சற்றே அதிர்ச்சி.கம்யூனிச சிந்தை உள்ள ,ஊடக விபச்சாரிகளின் திட்டமிட்ட பிரசாரத்தை நன்கு அறிந்த ,பாசிச கும்பலின் திட்டமிடலை தெரிந்த இவர் இப்படி சொன்னதும் அதிர்ச்சி அடைந்தேன்.

அந்த முசுலீம் நண்பர் " ஏன் மாமா உங்க பேரன் வச்சிருந்தால் அது விளையாட்டு என் மகன் வச்சிருந்தால் அவன் தீவிரவாதியா''? என்று கேட்டுகொண்டே தலை நிமிர்ந்தவரின் கண்கள் கலங்கி கண்ணீரை உதிர்த்தது .

அதை கண்டதும் இருவரும் பதறி அவரை சமாதானபடுத்தினோம்.என் சித்தப்பாவை கடிந்து கொண்டேன்.'' தம்பி விஸ்வரூபம் படத்தை எதுக்கு எதிர்தாங்கன்னு இப்போதான் புரியுது .என்றார்.

அவரின் "உங்க பேரன் வச்சிருந்தா விளையாட்டு என் மகன் வச்சிருந்தா தீவிரவாதியா" என்ற கேள்வி இன்னும் என் காதுகளில் ஒலித்து கொண்டிருக்கிறது .அவரின் கலங்கிய முகம் மனதை விட்டு மறைய மறுக்கிறது .

என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம் ? இவர்களின் அச்சத்தை போக்கை வேண்டியது நம் கடமையல்லவா ?

நன்றி - இனியவன் தமிழன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home