1 November 2013

பொன் வண்டு...


சிறிய வயது நினைவுகளை அசைபோடுவதே தனி சந்தோசம் தான் அனைவருக்கும். இன்றைய நினைவில் பொன்வண்டு.

பள்ளியில் படிக்கும் காலத்தில் இந்த பொன் வண்டு எங்களிடம் படாத பாடு பட்டது எங்க ஊர் ஆத்தோரம் பொன்வண்டுகள் நிறைய இருக்கும். சனி ஞாயிறு பள்ளி விடுமுறைகளில் காலை உணவுக்கு பின் பொன்வண்டு வேட்டைக்கு செல்வோம் அங்கு சென்று செடி கொடிகளில் தேடி தேடி பொன்வண்டி பிடித்து வருவோம் இதில் இந்த வண்டை பிடிக்கும் போது தலைக்கும் உடம்பிற்கும் உள்ள இடையில் கை பட்டால் கடித்து விடும் நாங்க அப்பவெல்லாம் கை விரல் கட் ஆகிடும் என பிட்ட போட்டு மிரட்டுவோம்...

நண்பர்களிடம் விளையாடுகிறேன் என்ற பேரில் அவர்கள் சட்டைப்பைக்குள் இந்த வண்டை விட்டு விட்டு வேடிக்கை பார்ப்போம் எங்களை எதிரியாக உள்ள பெண்களின் சாமுண்டரி பாக்ஸ் இல் போட்டு அவர்களை அதை திறக்க வைத்து கத்த வைத்து வேடிக்கை பார்ப்பதும் ஒரு சந்தோசம்...

சாமுண்டரி பாக்ஸில் தவிடு போட்டு அதன் மேல் வாகை இலையை போட்டு அதற்குள் அடைத்து வைப்போம். சில நேரங்களில் டப்பாவை திறந்ததும் பறந்து ஓடிவிடும். இருத்தும் பத்திரமாக வைத்து பள்ளிக்கூடத்துக்கு எல்லாம் கொண்டு போவோம்.

பொன்வண்டு சிறியதாக சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை என கலர்க்கலராய் முட்டையிடும். அந்த முட்டையில் விளக்கெண்ணையை தடவி வெயிலில் வைத்தால் குஞ்சு பொறிக்கும் என்ற வழிவழியாய் வந்த வாய்ச்சொல்லை நம்பி எண்ணையை தடவி வெயிலில் காத்திருந்த நாட்கள் எல்லாம் உண்டு. கடைசிவரை அப்படி ஒன்று நிகழ்வதேயில்லை.

பொன்வண்டு எல்லாருடைய புத்தகப் பைக்குள்ளும் வாகை இலையை சாப்பிட்டபடி வலம் வந்த நாட்கள்தான் எத்தனை இனிமையானவை.

பொன்வண்டு இன்றும் மறக்க முடியாது ஒன்று...


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home