22 November 2013

கலவரத்தைத் தூண்டிய எம்.எல்.ஏக்களை கெளரவிக்க பா.ஜ.க முடிவு.....!!





அண்மையில் தேசத்தின் இழிவாக அமைந்த முஸஃபர்நகர் கலவரத்தைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சங்கீத் சோம், சுரேஷ் ராணா ஆகியோரை நரேந்திர மோடியின் ஆக்ரா பேரணியில் கெளரவிக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது.

பேரணி நாளை மறுநாள் வியாழன் அன்று நடைபெறும் என்று தெரிகிறது. பாரதிய ஜனதாவின் இந்த முடிவு அரசியல் அரங்கிலும் பொது மக்களிடத்திலும் பெரும் அதிர்ச்சி அலைகளைத் தோற்றுவித்துள்ளது.

இதுபற்றி தெரிவித்த பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் விஜய் பகதூர் பதக் கூறுகையில்...

சமாஜ்வாதி அரசு இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறது. கலவரத்தில் பங்குகொண்ட ஒருவருக்கு அரசு மரியாதை செய்கிறது.

ஆனால் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை சிறைவைத்தது என்று கூறினார். கலவரம் குறித்து விசாரிக்கும் ஆணையத்தை மேலும் ஆறு மாதங்கள் நீட்டித்தது ஏன் ? என்றும் பதக் கேள்வி எழுப்பினார்.

முன்னதாக கலவரத்தைத் தூண்டும் பேச்சுக்களைப் பேசியதாகவும், பொய்யான வீடியோ (காணொளிக்)காட்சிகள் மூலம் வெறி ஏற்றியதாகவும் சங்கீத் சோம், சுரேஷ் ராணா ஆகிய பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

நன்றி : இந்நேரம்
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home