நீங்கள் முடிவெடுப்பது லாஜிக்கலாகவா? உணர்வுப்பூர்வமாகவா? ஒரு டெஸ்ட்
மூளையின் இடது பக்கம்
லாஜிக்கலாகவும் மூளையின் வலது பக்கம் உணர்வுப்பூர்வமாகவும் செயல்படுகிறது,
உங்கள் முடிவுகளில்
லாஜிக்கல் டாமினேசன்
அதிகமா? அல்லது
உணர்வுப்பூர்வமாக செயல்படுவது அதிகமா என்பது குறித்து ஒரு டெஸ்ட் இந்த லிங்கில்
உள்ளது, எளிதான
இந்த சிறிய டெஸ்ட்டில் உங்கள் முடிவுகளின் மூலத்தை அறிந்து
கொள்ளுங்கள்.
http://en.sommer-sommer.com/braintest/
# உங்கள் டெஸ்ட்
ரிசல்ட் என்ன? நீங்கள்
லாஜிக் மனிதரா? உணர்வுப்பூர்வமான
மனிதரா என்பதை கமெண்ட்டில் சொல்லுங்கள்
நீங்கள் மூளையின் வல
பக்கமா? இடப்
பக்கமா?ஒரு சின்ன டெஸ்ட்!!
உலகிலேயே
மிக மிக ஆச்சரியம் – மனித மூளை.
அதனுள் பல்லாயிரம் கோடி
நுட்பமான உயிரணுக்கள்,
செல்கள்
உள்ளன. ஒவ்வொரு செல்லையும் ஒரு மண் துகள் அளவுக்குப் பெரிசு பண்ணினால் ஒரு லாரி நிரம்பும்! இந்த
செல்களில் ஆயிரம் கோடி
நியூரான்கள், நரம்புச்
செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை! மனிதன் உயிர் வாழும்வரை இந்தச்
செல்களிடையே மின்
துடிப்புகள் திரிகின்றன.இந்நிலையில் மூளையை பொறுத்த மட்டில் இடது, வலது என இரு பாதிகளாக உள்ளன. ஒரு நரம்பு குவியல் இரண்டையும்
இணைக்கிறது. இந்த இணைப்பு “corpus callosum” எனப்படும்.
வால்நட் பருப்பு இணைந்துள்ளது போலவே காணப்படும். செரிபெரம் இரு பகுதிகள் என மூளையை
கொண்டுள்ளது. இடது பாகம் உடலின்
வலது புறத்தையும், வலது பாகம்
உடலின் இடது புறத்தையும்
கவனித்துக்கொள்கிறது. “corpus
callosum” பகுதியை சமமாக வெட்டினால் இரு பாகங்களான
மூளைக்கு தொடர்பே இருக்காது.அதிலும் ஒரு பாகம் செயல் படுவது மற்றொரு பாகத்துக்கு தெரியாது. இரு பகுதிகளும் சமமானதா? ஒரு பாகம் செய்ய முடியாததை மற்றுது செய்யுமா? (அ) செயல்படுத்துவதில் வித்தியாசம் உள்ளதா? 1861ல் இரண்டும் வெவ்வேறானவை எனப்பட்டது. பிரெஞ்சு டாக்டர் ப்ராகா பேச முடியாத நோயாளியை கண்டார். நாம் சொல்வதை புரிந்து கொண்டாலும் அவனால் திரும்ப பேச முடியாது. முக பாவங்களை, கை அசைவு கொண்டு அவனால் அறிவு பூர்வமாக பதிலளிக்க முடியும். ஆனால் பேச முடியாது.
இதற்கிடையில் இதில் இடதுபக்க மூளையை பயன்படுத்துபவர்கள் முடிவுகளை எடுக்கும்போது அவை லாஜிக்கலாக இருக்குமாறு பார்ப்பார்கள், அதேபோல் வலப்பக்க மூளையை பயன்படுத்துபவர்கள் தொலைதூர நோக்குடன் முடிவுகளை எட்டுவார்களாம் என்றெல்லாம் சொல்வார்கள்.
சரி இவற்றில் நீங்கள் எந்தவகையைச் சேர்ந்தவர்கள் நீங்கள் எப்பக்க மூளையை பயன்படுத்துகின்றீர்கள் என்பதை கண்டறிய சிறிய பரீட்சை ஒன்றை உருவாக்கியுள்ளனர் ஒரு இணையத்தள வடிவமைப்பாளர்கள். (பரீட்சை ஆங்கிலத்தில் தான் இருக்கிறது என்றாலும் எல்லோரும் சட்டென புரிந்து கொள்ள முடியும்)
இந்த பரீட்சையின் முடிவில் உங்களை இயக்குவது வலதா அல்லது இடது மூளையா என்பதை அறியலாம். 30 செக்கனுக்குள் கண்டுபிடிக்கலாம் என்று தான் இந்த இணையத்தளம் சொல்லும். ஆனால் அதற்காக ஆர்வக் கோளாறில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பட்டு பட்டுனு பட்டன்களை தட்டிச் சென்றீர்கள் என்றால் இறுதி முடிவு சில வேளை தவறாக கொடுக்கலாம். எனவே கொஞ்சம் நின்று நிறுத்தி நிதானமாக மனம் என்ன சொல்கிறதோ, மன்னிக்க, மூளை என்ன சொல்கிறதோ அதனபடி பதில் அளியுங்கள். முடிவில் நீங்கள் எந்தப்பக்க மூளையை பயன்படுத்துபவர் என ஆதாரத்தோடு அடித்துச் சொல்கிறது இப்பரீட்சை.
இனி பரிட்சைக்கு க்ளிக் ::: http://en.sommer-sommer.com/braintest/
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home