21 November 2013

இந்தியாவின் மானத்தை தலைகுனிய வைத்த காமவெறியர்களே....



இந்தியாவின் மானத்தை தலைகுனிய வைத்த காமவெறியர்களே....

இந்தியாவில் கற்பழிப்பு குற்றங்கள் அதிகரித்து நடப்பதால் அமெரிக்க மாணவிகள் இந்தியாவில் படிக்க வருவதில்லை என்று இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் நான் சி பவெல் தெரிவித்துள்ளார்.

கற்பழிப்பு பயமே காரணம் என்று தெரிவித்துள்ள இக்கருத்து இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை பாஜக போன்ற தேசிய கட்சிகள் உணர வேண்டும்.

ஏனென்றால் கட்சி ரீதியில் பார்த்தால் பாஜக அலுவலகத்திலேயே பெண்ணை கற்பழித்தது, அதிகப்படியான பாஜக நிர்வாகிகள் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்படுவது என்றும் ஒரு புறம் தொடர்கிறது.

அடுத்ததாக செக்ஸ் சாமியார் மூலம் பாலியல் மற்றும் கற்பழிப்பு புகார்கள் தினம் தினம் குவிந்து வருகின்றன.

அதே சமையம் கற்பழிப்பில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு சவூதி அரேபியாவை போல் மரண தண்டனை வழங்கப்பட்டால்...

கற்பழிப்பு குற்றங்கள் கணிசமான அளவில் குறைந்து விடும்.

என்பதையெல்லாம் உணர்ந்து கற்பழிப்பு குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்க அரசு ஆவணம் செய்ய வேண்டும்.

அப்படி செய்தால் தான் குனிந்த தலையை இந்தியா நிமிர்த்த முடியும்.

நன்றி : பெரியார் இந்தியா
-
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home