இஸ்ரேலில் வந்த சேதி
அஸ்ஸலாமு அலைக்கு
வரஹ்மதுல்லாஹ்:சகோதர்களே இஸ்ரேலில் வந்த சேதி நம் கிறிஸ்துவ சகோதர்கள் போஸ்டு செய்து உள்ளார்கள் இதை பற்றி பைபுள்
சொல்கிறது என்று இந்த ஆதாரம் சொல்கிறது அதாவது தாவித் மன்னர் பற்றி பைபுள் தான் கூறுதாம் ஆனால் இந்த தாவித்(அலை)
அவர்கள் பற்றி குர்ஆனிலும் இருக்கிறது ஆனால் அதை மறைத்துவிட்டு பைபுளில்
இருக்கிறது என்று சொல்கிறார்கள்.பைபுளில் தாவித் (அலை)அவர்களை பற்றி பைபுள்
சொல்கிறது இதை நான் மறுக்க வில்லை ஆனால் குர்ஆனிலும் இருக்கிறதை மறைக்கவும்
கூடாது மேலும் தாவித என்பது பைபுளின் பாசை குர்ஆனின் பாசை தாவூத்(அலை),சரி இனி தாவித்(அலை) பற்றி பைபுள் என்ன
சொல்கிறது மற்றும் குர்ஆன் என்ன சொல்கிறது பாக்கலாம்:தாவித்(அலை)பற்றி நீங்கள்
பைபுளில் படிக்கும் போது அவர் ஒரு விபச்சாரகர் என்று
இட்டுகட்டியுள்ளது(அல்லாஹ் காப்பாத்த வேண்டும்) ஆனால் இவர்கள் பற்றி குர்ஆனும் இவ்வாருதான்
சொல்கிறதா என்று பார்போம்.... பைபுள் தாவித்(அலை) அவர்களை
இட்டுகட்டியது: ********************************** 2. ஒரு நாள் சாயங்காலத்தில் தாவீது (
டேவிட் ) தன் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை உப்பரிகையின் மேல்
உலாத்திக் கொண்டிருக்கும் போது ஸ்நானம் பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின்
மேலிருந்து கண்டான். அந்த ஸ்திரீ வெகு செளந்தரவதியாயிருந்தாள். 3. அப்போது தாவீது அந்த ஸ்திரீ யார் என்று
விசாரிக்க ஆள் அனுப்பினான். அவள் எலியாமின் குமாரத்தியும், எத்தியனான உரியாவின் ம்னைவியுமாகிய
பத்சேபாள் – என்றார்கள். 4. அப்போது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னான், அவள் அவனிடத்தில் வந்தபோது அவளோட
சயனித்தான். பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக் கொண்டு
தன் வீட்டுக்குப் போனாள். 5. அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினான். சாமுவேல் – அதிகாரம் – 11″ குர்ஆனில் இந்த தாவூத்(அலை) பற்றி:
********************************* 2:251. ஆதலால், அவர்கள் அல்லாஹ்வின் உதவியைக்கொண்டு அவர்களை முறியடித்து விட்டார்கள். இதில் (எதிரிகளின் அரசனாகிய) ஜாலூத்தை (தாலூத்துடைய படையிலிருந்த) தாவூத் வெட்டினார். பின்னர், அவருக்கு அல்லாஹ் ஞானத்தையும், அரசாங்கத்தையும் அளித்து (போர்க்கவசம்
செய்வது போன்ற) தான் விரும்பியவைகளை எல்லாம் அவருக்குக் கற்பித்துக்
கொடுத்தான். (இவ்வாறு) மனிதர்களில் (தீங்கு செய்யும்) சிலரை மனிதர்களில் சிலரைக்
கொண்டே அல்லாஹ் தடுக்காவிட்டால் இப்பூமி அழிந்தேயிருக்கும். ஆயினும்
நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார் மீது கருணையுடையவனாக இருக்கின்றான்.
5:78. இஸ்ராயீலின் சந்ததிகளில் எவர்கள்
(இவ்வேதத்தை) நிராகரிக்கின்றார்களோ அவர்கள் தாவூத் மற்றும் மர்யமின் மகன்
ஈஸா ஆகிய இவர்கள் நாவாலும் சபிக்கப்பட்டே இருக்கின்றனர்.
ஏனென்றால், அவர்கள் (அக்காலத்திலும்) வரம்பு கடந்தே பாவம் செய்து வந்தனர்.
6:84. நாம் (இப்ராஹீமாகிய) அவருக்கு
இஸ்ஹாக்கையும் (அவருடைய மகன்) யஅகூபையும் (சந்ததிகளாகத்) தந்தருள்
புரிந்தோம். இவர்கள் அனைவரையும் நாம் நேரான வழியில் செலுத்தினோம். இதற்கு
முன்னர் நூஹையும், அவருடைய சந்ததிகளாகிய தாவூத், ஸுலைமான், ஐயூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நாம் நேரான வழியில் செலுத்தினோம். நன்மை செய்பவர்களுக்கு இவ்வாறே
நாம் (நற்) கூலி
அளிக்கின்றோம். 21:78. தாவூதையும் ஸுலைமானையும் (நபியாக அனுப்பி வைத்தோம்.) ஒருவருடைய ஆடுகள் மற்றொருவரின் பயிரை மேய்ந்துவிட்டது பற்றி (தாவூத், சுலைமான் ஆகிய) இருவரும் தீர்ப்புக் கூற இருந்த
சமயத்தில் அவர்களுடைய தீர்ப்பை நாம் (கவனித்துப்) பார்த்துக் கொண்டிருந்தோம். 38:24. அதற்கு தாவூத், "உன்னுடைய ஆட்டை, அவர் தன்னுடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படி கேட்பது நிச்சயமாக அவர் உங்கள் மீது செய்யும்
அநியாயமாகும். கூட்டாளிகளில் பெரும் பாலானவர்கள், ஒருவர் ஒருவரை மோசம் செய்து விடுகின்றனர்; நம்பிக்கை கொண்டு நற்செயல் செய்கிறவர்களைத் தவிர, (நம்பிக்கையாளர்கள் அவ்வாறு
செய்வதில்லை. மோசம் செய்யாத) இத்தகையவர்கள் வெகு சிலரே!" என்று கூறினார்.
இதற்குள் நிச்சயமாக நாம் தாவூதை சோதனைக்குள்ளாக்கி விட்டோம் என்று
தாவூத் எண்ணி, தன் இறைவனிடம் தன் குற்றத்தை மன்னிக்கும்படி கோரி,
சிரம் பணிந்து வணங்கி தன் இறைவனை
நோக்கி பிரார்த்தனை செய்தார். தாவூத்(அலை) அவர்களை பற்றி முஹம்மது
நபி(ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்:
**************************************** 1974: 'தாவூத் நபி(ஸல்) அவர்களின் நோன்பு
எவ்வாறு இருந்தது?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'வருடத்தில் பாதி நாள்கள்!"
என்றார்கள். Volume :2 Book :30 1976:“அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக!,
இதுதான் தாவூத் நபியின் நோன்பாகும்!
நோன்புகளில் இதுவே சிறந்ததாகும்!” என்றார்கள். நான் “என்னால் இதைவிட சிறப்பாகச் செய்ய முடியும்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் “இதைவிடச் சிறந்தது எதுவும் இல்லை!”
என்றார்கள். Volume :2 Book :30
1980: 'தாவூத் நபி(அலை)
அவர்களின் நோன்புக்கு மேல்(சிறப்புடையதாக)எந்த நோன்பும் இல்லை; அது ஆண்டின் பாதி நாள்களாகும்! எனவே,
ஒரு நாள்விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பீராக!" என்றார்கள். Volume :2 Book
:30 2072. இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்: "ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்." என மிக்தாம்(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :34 2073. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தாவூத் நபி(ஸல்) தம் கையால் உழைத்தே
தவிர உண்ண மாட்டார்கள்." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :34 4713. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' தாவூத்(அலை) அவர்களுக்கு வேதம் ஓதுவது
இலேசாக்கப்பட்டிருந்தது. அவர்கள் தம் வாகனப் பிராணிக்குச் சேணம் பூட்டிடக்
கட்டளையிடுவார்கள். (பணியாள்) சேணம் பூட்டி முடிப்பதற்குள் -வேதம் -
முழுவதையும் ஓதிவிடுவார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :5 Book :65 5048. அபூ மூஸா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில்
குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) 'அபூ மூஸா! (இறைத்தூதர்) தாவூத் (அலை)
அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும்
வழங்கப்பட்டுள்ளது' என என்னிடம் கூறினார்கள். Volume :5 Book
:66 இன்னும் அதிகம் இருக்கிறது
தேவைப்பட்டால் தருகிறேன் உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.ஆனால் எங்கள் இறைதூதர்
தாவித்(அலை)ஒரு விபச்சாரகர் இல்லை என்று நிருபிக்கதர்காக தான் நான் பைபுளின்
வசனமும்,குர்ஆன் மற்றும் ஹதீஸின் வசனம் போட்டோம்:
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home