8 November 2013

முஸாபர் நகர் : தந்தையை கொன்று குல்லாவை வீசி சென்ற மகன்.....!!



உத்திர பிரதேச மாநிலத்தில் சஹாரன்பூர் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி, ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சந்திர பால் சிங் சுட்டு கொல்லப்பட்டார். கொலை செய்யப்பட்ட இடத்தில் முஸ்லிம்கள் அணியும் தொப்பியும் கிடந்தது. முஸாபர்நகர் வகுப்பு கலவரம் அருகில் உள்ள பகுதிகளுக்கும் பரவியுள்ளதால் இந்த சம்பவம் நடந்திருக்கும் என்று எண்ணியது காவல்துறை.

பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒருவர் தான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கொல்லப்பட்ட சந்திரபால் சிங்கின் மனைவியும், மகன் ஜோகேந்திராவும் குற்றம் சாட்டினர்.

இதை தொடர்ந்து நடந்த விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளிவந்துள்ளன. சத்திர பால் சிங்கை கொன்றது வேறு யாருமல்ல, அவருடைய மகன் ஜோகேந்திராவே என்று தெரியவந்துள்ளது. கலவர இழப்பீட்டு தொகையான பத்து லட்சத்தை பெறுவதற்காக தன் தந்தையை தானே கொன்றது அம்பலமாகியுள்ளது. முஸ்லிம்கள் கொன்றது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த குல்லாவை அங்கு விட்டு சென்றதும் தெரியவத்துள்ளது.

இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று எண்ண வைக்கும் இந்த சம்பவம் ஒரு புறம் இருக்க, உண்மையை கண்டுபிடித்து தெளிவை உண்டாக்கிய காவல்துறைக்கு மனமார்ந்த நன்றிகள். ஒரு சிலரின் சுய லாபத்திற்கு மட்டுமே இந்த கலவரங்கள் என்பதை உணர்ந்து இவற்றில் இருந்து விடுபட சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும்.

தமிழ்நாட்டிலும், முஸ்லிம்கள் மீது பழியை போட தன் வீட்டின் மீதே குண்டு போட்டுக்கொண்ட பாஜக நிர்வாகி கைதானது நினைவிருக்கலாம்


பதவி, பணம் வெறி பிடித்த சிலர் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள எப்படியும் இறங்குவர் என்பதற்கு இந்த சம்பவங்கள் உதாரணம். இதனை உணர்ந்துக் கொண்டு தூண்டுதலுக்கு பலியாகாமல் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நன்றி : ஆஷிக் அஹமத் & இப்ராஹீம் முஹம்மது

http://www.deccanherald.com/content/367526/up-son-kills-father-get.html

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home