8 November 2013

தஃவா பணியை மேற்கொள்ளும் போது....?



அகிலங்களின் ரப்பாஹிய அல்லாஹ்வினால் மனிதனை இருளில் இருந்து வெளிச்சத்திற்கு கொண்டுவருவதற்கு அருளப்பட்ட வாழ்க்கை முறையாகவே தீனுல் இஸ்லாம் உள்ளது.

இந்த தீனுல் இஸ்லாத்தின் செய்தியை சுமந்த இறைவழிகாட்டியாக இறைவேதங்கள் அமைகிறது. இதனைக் கொண்டு மனிதசமூகம் எழுச்சிபெற, மறுமலர்ச்சி பெற , நேர்வழிபெற அல்லாஹ் இறைத்தூதர்களை மனித சமூகத்திற்கு அனுப்பி அவர்களை அவனது வழிகாட்டலின் பக்கம் அழைத்தார்கள்.

இவ்வழைப்புப் பணியின் போது ....
1.
மனிதன் ஜாஹிலிய்ய சிந்தனைகளை கொண்ட இருள் நிறைந்த வாழ்வில் இருந்து ஒளிமயமான வாழ்வை நோக்கி அழைப்பு விடுக்கப்பட்டது.

2.
மனிதன் காட்டுமிராண்டித்தனமாக வாழ்க்கை வாழ்ந்த போது அல்லாஹ் விரும்பும் அழகிய நிம்மதி நிறைந்த வாழ்வை நோக்கி அழைப்பு விடுக்கப்பட்டது.

3.
மனிதன் நிம்மதியிழந்து வாழ்ந்து மற்றவனையும் நிம்மதியழக்க வைத்து அடக்குமுறையை கையாண்ட போது அவனை அவ்வடக்கு முறையில் இருந்து விடுவிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.

4.
மனிதன் மனோஇச்சையை பின்பற்றி தமது வாழ்வியல் ஒழுங்குகளை அமைத்துக் கொண்டபோது இறையில் அடிப்படையிலான வாழ்வியல் ஒழுங்குமுறை நோக்கி அழைப்பு விடுக்கப்பட்டது.

5.
மனிதன் குப்ருடை வாழ்க்கை வாழ்ந்த போது ஓரிறைக் கொள்கையை நோக்கி அழைப்பு விடுக்கப்பட்டது.

இவ்வாறு மனிதனை இருளில் இருந்து வெளிச்சத்திற்கு கொண்டுவரும் போராட்டத்தில் எதிரியாக தாகூதாகிய இப்லீசும், அடக்குமுறைக்குள்ளாக்கும் தலைவர்களும், குப்ருடைய ஆட்சியாளர்களும் இருக்கவே செய்தார்கள். இதுபற்றி அல்குர்ஆன் மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது.

எனவே, அல்லாஹ்வினது அழைப்பு பணிஎன்பது இலகுவானது அல்ல. எல்லா வகையான சவால்களையும் எதிர்கொள்ளவேண்டிய இறைபணி.

கொள்கையில் இருந்து பின்வாங்காது ஹக்கை உள்ளபடி எடுத்துரைத்து பொறுமையுடன் தொடர்ந்து தஃவா செய்துகொண்டே இருக்கவேண்டும்.

அந்நிலையில் நிச்சயம் அல்லாஹ்வுடைய உதவி அவனது நேசர்களுக்கு கிடைக்கும்.

இது பற்றி அல்லாஹ் மிகத் தெளிவாக தனது திருமறையில் பல்வேறு நபிமார்கள் தங்களது தஃவாவை சற்றேனும் பின்வாங்காது தொடர்ந்து குப்ருக்கு எதிராக மேற்கொண்டு இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி அழைத்த போது எவ்வாறு உதவிசெய்யப்பட்டார்கள் என்பதனை விளக்குகிறான்.

எனவே, இன்றைய எமது தஃவா பணியில் நாம் அழகிய பொறுமையுடன் ஹக்கை உள்ளபடி எடுத்தியம்ப கடமைப்பட்டுள்ளோம் என்பதனை உணரவேண்டும். அப்போதுதான் ரப்புல் ஆலமீனுடைய உதவியை நாம் காணமுடியும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home