8 November 2013

ஹெல்த் டிப்ஸ் : மிளகாய் !!



காரம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது மிளகாய் தான். அப்படிப்பட்ட மிளகாயை பலர் விரும்புவதில்லை, முக்கியமாக குழந்தைகள். 

ஆனால் காரசாரமாக உண்ணும் இன்னும் சிலரோ மிளகாயை விரும்பி உணவில் சேர்த்துக் கொள்வார்கள். 

அதையும் மீறி அதனை பற்றி பலருக்கு எதுவும் தெரிவதில்லை. 

இதயக்குருதி குழாய் நோய்களின் இடர்பாடு குறையும் 

கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைக்ளிசரைடு அளவுகளை குறைப்பதோடு மட்டுமல்லாமல், ஆபத்தான இரத்த உறைதலை உண்டாக்கும் இரத்தக் கட்டிகளை குறைக்கும். 

இதயக்குருதி குழாய் நோய்கள் வருபவர்களும் சரி, ஏற்கனவே வந்தவர்களுக்கும் சரி, மேற்கூறிய உடல்நல பயன்கள் மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகிறது. 

அழற்சி குறையும்

மிளகாய் உண்ணுவதால் ஏற்படும் மற்றொரு மிக முக்கியமான உடல்நல பயன், அழற்சி குறையும். 

முக்கியமாக கீல்வாதம் உள்ளவர்களுக்கு இது பெரிய நிவாரணியாக விளங்கும். மேலும் மிளகாய் என்பது உடலில் ஏற்பட்டுள்ள வலியை குறைக்கவும் உதவுகிறது. 

மிளகாயில் அதிக அளவு காப்சைசின் உள்ள காரணத்தினால் தான் மேற்கூறிய உடல்நல பயனை பெற முடிகிறது. மேலும் இன்று அதிக அளவில் காப்சைசின் நிறைந்துள்ள க்ரீம்கள் சந்தையில் கிடைக்கிறது. கீல்வாதம், முதுகு வலி மற்றும் இதர வலிகளுக்கும் அவை பயன்படுகிறது. 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home