7 November 2013

முதலாளித்துவத்தில்....?




முதலாளித்துவத்தில் எப்போதும் முதாலாளிகளது நலன்கள் பேணப்படுவதிலேயே அதீத அக்கறை இருக்கும்!
முதலாளிகளது நலன்களை காப்பதற்கு "மக்களை உறிஞ்சும்" வாழ்வியல் ஒழுங்கை கொண்ட உலக தலைமைத்துவமே முதலாளித்துவம்.
இங்கு முதலாளிகளுக்கு தேவையான சட்டங்கள் ஆக்கப்பட்டு மக்கள் மீது திணிக்கப்படும். முதலாளிகளது நலன்களில் காணப்படும் அக்கறை பொதுமக்கள் மீது காணப்படமாட்டாது.
முதலாளிகளது நலன்கள் தொடர்ந்தும் காக்கப்பட பின்வரும் சிந்தனைகளை சமூகத்தில் விதைத்து அதன் அடிப்படையில் முதலாளிகளது நலன்கள் காக்கப்படுகிறது.
மத ஒதுக்கல் சிந்தனை: (Secularism) பொதுவாழ்வினது பிரச்சினைகளுக்கான தீர்வை மதம் முன்வைக்காது. மனிதச் சிந்தனையின் அடிப்படையில் சமூகத்தினது அரசியல் பொருளியல் சமூகவாழ்வு குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வு முன்வைக்கப்படும். இது தொடர்ந்து சமூகத்தை சுரணட வழிவகுக்கும். மனிதனுக்கு நிரந்தர தீர்வை வாழ்வில் எழும் எந்த பிரச்சினைகளுக்கும் வழங்காது. காரணம் இங்கு அகிலங்களில் ரப்பாஹிய அல்லாஹ்வின் வழிகாட்டல் புறக்கணிக்கப்படுகிறது. மனிதச் சிந்தனையே ஆதிக்கம் செலுத்துகிறது.
தாராண்மைவாதச் சிந்தனை: (Liberalism) இதன் மூலம் தனிமனித சுதந்திரம் எனும் பெயரில் மனிதன் மிருகத்திலும் கேவலமான நிலைக்கு தன்னை மாற்றிக் கொள்கிறான். (Ex: Gay Marriage, Homo sex, Incest)
ஜனநாயக ஆட்சியமைப்பு: (Democracy) இதன் மூலம் முதலாளிகளது நலன்கள் காக்கப்படத் தேவையான சட்டங்களை இயற்றி பொதுமக்களை உறிஞ்சும் முறைமையை நாம் காணலாம்.
சுதந்திரம் எனும் எண்ணக்கரு: (Freedom) இதன் மூலம் முதலாளிகளது உச்சகட்ட சுரண்டலுக்கான அனைத்து வழிகளுனம் திறக்கப்பட்டு பகற்கொள்ளை நடைபெறவழிவகுக்கிறார்கள். அத்துடன் மனிதன் தான்தோன்றித்தனமாக நடந்துகொள்ளும் நிலைக்கு சமூகத்தை தள்ளுவதுடன் சமூகத்தில் "ஒழுக்கம் குன்றி" "நிம்மதி இழந்து வாழும் நிலைக்கு" வழிஏற்படுத்தி விடுகிறது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home