7 November 2013

முட்டையை அவிக்கும் அளவிற்கு மொபைல் போனில் கதிர் வீச்சு



முட்டையை அவிக்கும் அளவிற்கு மொபைல் போனில் கதிர் வீச்சு வீரியமாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மொபைல் மூலம் முட்டைகளை அவித்துக் காட்டி இரண்டு ரஷ்ய பத்திரிகையாளர்கள் சாதனை புரிந்துள்ளனர். இன்றைய நவீன காலத்தில் மொபைல் போன்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ஆனால் அதே நேரத்தில் அவை எந்த அளவு ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் நாம் மறந்து விடுவதற்கில்லை. மொபைல் போன்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு எந்த அளவுக்கு வீரியமானவை என்பதை இரண்டு ரஷ்ய பத்திரிகையாளர்கள் சோதனை மூலம் செய்து காட்டியுள்ளனர். மொபைல் போன்களிலிருந்து வெளி வரும் கதிர்வீச்சு, முட்டைகளையே வேக வைக்க கூடியது என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.
இதற்காக அவர்கள் ஒரு சிறிய மைக்ரோவேவ் கருவியை உருவாக்கி உள்ளனர். ஒரு மொபைல் போனிலிருந்து மற்றொரு மொபைல் போனை அழைத்து அவற்றை பேசக்கூடிய நிலையில் வைத்தனர். அதே நேரத்தில் அவற்றுடன் ஒரு டேப் ரிகார்டரை இணைத்து இரு போன்களுக்கு இடையே உரையாடல் நடப்பதாக காண்பித்து இரு போன்களும் தொடர்ந்து பேசும் நிøயில் இருக்கச் செய்தனர். 15 நிமிடத்தில் போன்களுடன் இணைக்கப்பட்டிருந்த மைக்ரோவேவ் கருவியில் வைக்கப்பட்டிருந்த முட்டை சூடேற ஆரம்பித்தது. 40வது நிமிடத்தில் முட்டையின் வெப்பம் கடுமையாகியது. 65வது நிமிடத்தில் முட்டை முழுவதுமாக வெந்து காணப்பட்டது.
இந்த அளவுக்கு நீண்ட நேரம் எவரும் பேச வாய்ப்பு இல்லை என்றாலும் அவ்வாறு பேசினால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதையே இந்த சோதனை விளக்குகிறது. காதின் அருகில் இருக்கும் மூளைப் பகுதியை இந்த கதிர் வீச்சு எந்த அளவு பாதிக்கும் என்பதையும் இதன் மூலம் உணரலாம். 2 நிமிடம் தொடர்ந்து மொபைல் போனில் பேசினாலே அதிலிருந்து வரும் கதிர்வீச்சு, மூளையைப் பாதுகாக்கும் பகுதியில் ஊடுருவி விடும் என்பது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.
எனவே மொபைல் போனை நீண்ட நேரம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. பிரியமானவர்களிடம் தொடர்ந்து பேசும் மொபைல் பிரியர்கள் சற்று யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். முடிந்தவரை சாதாரண போன்களை பயன்படுத்த வேண்டும்; மொபைல் போனைத் தவிர்க்க முடியாதவர்கள், இயர் போனைப் பயன்படுத்துவது சற்று பாதுகாப்பானதாக இருக்கும் என்பதே இவர்களது அறிவுரை.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home