சுவதை தரும் முட்டை 65 (Egg 65)
முட்டை என்றாலே பலருக்கும் கொள்ளை
பிரியம். அதிலும் சிறு குழந்தைகள் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். தற்போது அசைவம் சாப்பிடாதவர்கள் கூட
புரதச்சத்து நிறைந்த முட்டையை சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். நமது வீட்டில்
அடிக்கடி தென்படும் இந்த முட்டையை வைத்து சுவாரஸியமான ஒரு உணவை செய்து
அசத்த நீங்கள் தயாரா..?
தேவையானவைமுட்டை – 4
சோம்பு – 1 ஸ்பூன்
பூண்டு – 5 பல்
சின்ன வெங்காயம் – 5
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
கறிவேப்பில்லை – சிறிது
சோள மாவு – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைகேற்ப
செய்முறை
முட்டையை வேகவைத்து, சமமான துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
(ஒரு முட்டையை இரு பாதிகளாக வெட்டிக்கொள்ளலாம்)
சோம்பு, சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகாய் தூள், கறிவேப்பில்லை ஆகியவற்றை மிக்சியில் போட்டு மையாக அரைத்துகொள்ளவும்.
இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேவையான அளவு சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
வேகவைத்த முட்டை துண்டுகளின் மீது இந்த மசாலா கலவையை பூசி 1/2 மணி நேரம் ஊறவைத்து, சூடான எண்ணெய்யில் பொரித்து சூடாக பரிமாறவும்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home