சென்னை விமான நிலையத்தில் தமிழும் இல்லை, பணியில் தமிழரும் இல்லை !
அண்மையில் சென்னை விமான நிலைய உள்நாட்டு
முனையத்திற்கு சென்றிருந்தேன். நுழைவாயிலில் இரு பாதுகாவலர்கள் பணியில் இருந்தனர். அவர்கள் பயணிகளின்
ஆவணங்களை பரிசோதித்து பயணிகளை உள்ளே அனுப்பிய வண்ணம் இருந்தனர். அவர்களிடம்
நான் சென்று தமிழில் பேசினேன். அதற்கு அவர்களால் பதில் சொல்ல
முடியாமல் ‘நை நை ‘ என்றனர் . பின்பு அவர்களிடம் தமிழ்
தெரியுமா என்று கேட்க அந்த பாதுகாவலர் இல்லை என்று தலை ஆட்டி ‘டெல்லி போலீஸ்’ என்றார் .
பின்பு அவரிடம் ஒன்றும் பேசாமல் அங்கிருந்து
விமான நிலைய உதவி மையத்தை அணுகினேன். அங்குள்ள உதவி மையத்தில் தமிழில்
பெயர் பலகை இல்லை, தமிழில்
பேசக்கூடிய அதிகாரியும் இல்லை. இருப்பினும் அந்த அதிகாரியிடம் தமிழில்
பேசத் தொடங்கினேன். அவருக்கு சரியாக புரியவில்லை. சற்று நேரத்தில் வேறு ஒரு
தமிழ் தெரிந்த ஊழியர் அங்கு வந்து நம்மிடம் விசாரித்தார். அவரிடம் தமிழ்
தெரியாத பாதுகாவலரை நியமித்து உள்ளீர் , 90 % பயணிகள் தமிழ்நாட்டு பயணிகள் உள்நாட்டு
முனையத்தை பயன்படுத்துகின்றனர்
. ஆனால் இந்த பாதுகாவர்களுக்கு தமிழ் பெயரளவுக்கு கூட தெரியவில்லை என்று புகார் அளித்தேன்.
இதை புரிந்து கொண்ட தமிழ் பேசாத அதிகாரி, இப்போது தமிழ்நாட்டு பயணிகள் யாரும்
தமிழ் பேசுவதில்லை அதனால் தான் நாங்கள் தமிழ் தெரியாத
பாதுகாவலர்களை நியமித்துள்ளோம் என்று திமிராக ஆங்கிலத்தில் கூறினார் .
பின்பு நானும் ஆங்கிலத்தில் , இப்படித் தான் டெல்லியில் இந்தி தெரியாத ஒரு
பாதுகாவலரை நியமிப்பீர்களா என்று கேட்டதற்கு மௌனம் சாதித்தார். இங்குள்ள
பல ஆங்கிலம் தெரியாத தமிழர்கள் பயணிக்கிறார்கள், அவர்களுக்கு புரியும் மொழியில் தான்
நீங்கள் பேச வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் அதை பற்றி
அந்த அதிகாரி சட்டை செய்யவில்லை . நானும் புகார் கொடுக்க வேண்டிய இடத்தில்
புகார் அளிக்க்றேன் என்று புறப்பட்டு வந்து விட்டேன் .
வெளியே வந்ததும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்
ஒருவர் அங்கு வந்தார் . அவரிடம் இது பற்றி கூறினேன் . அவரும், இதெல்லாம் நம் கட்டுப்பாட்டிற்குள்
இல்லையே , நடுவண்
அரசின் கட்டுக்குள் தானே வருகிறது நாம் என்ன செய்ய முடியும் என்றார் . நான்
கூறினேன் , இருப்பினும்
தமிழ்நாட்டில் தானே விமான நிலையம் உள்ளது , அதனால் பணியாளர்கள் அனைவர்க்கும்
தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்றேன் . அவரும் சரிங்க , நீங்கள் விமான நிலைய இயக்குனருக்கு ஒரு
புகார் கொடுங்கள் பார்ப்போம் என்று நகர்ந்தார்.
இன்று விமான நிலைய மேலதிகாரிகளை தொடர்பு கொண்டு
புகார் அளித்துள்ளேன் . அவர்களும் இந்த குறை இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
எனினும் இயக்குனரை நேரில் சந்தித்து புகார் அளிக்க வேண்டும் என்றதால், அவரை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்து
நம்மை அழைப்பதாக கூறியுள்ளனர்.
மேலும் விமான நிலையத்தின் வெளியே உள்ள எந்த
உணவகங்கள், கடைகளுக்கும்
தமிழில் பெயர்பலகை இல்லை. அதையும் அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டி உள்ளேன்
. அது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளனர் . விரைவில் இதை
மாற்றி விடலாம் . ஆனால் பணியாளர்கள் தமிழ் அறிந்தவர்களாக இருக்க வேண்டும்
என்ற கோரிக்கை மட்டும் நாம் இன்னும் கவனம் செலுத்த வேண்டி உள்ளது .
இரண்டு கோரிக்கைகள் 1 . விமான நிலைய பாதுகாவலர்கள் தமிழ் தெரிந்தவராக
இருத்தல் வேண்டும் . 2 விமான
நிலையத்தில் உள்ள
அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை இருத்தல்
வேண்டும். நீங்களும் புகார் அளிக்கலாம். விமான நிலையத்தை தமிழ் படுத்தலாம்.
தொடர்பு எண் . 044 22560551
நன்றி ராஜ் குமார் பழனி சாமி
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home