பூக்கள்.
நாங்கள் ரோஜாவைப் போலல்ல
அதில் முள்ளிருக்கும் !
நாங்கள் தாமரையைப் போலுமல்ல
அதை சூடவும் முடியாது
அதன் வாசனையை சுவைக்கவும் முடியாது !
நாங்கள் அரளிப் பூக்களுமில்லை
கவர்சிகாட்டி மயக்கும்
கனகாம்பரமுமில்லை !
நாங்கள்
வெள்ளை மனம் கொண்ட
பிச்சிப்பூக்கள் !
பலகாலம்
குரங்கு கை பூக்களாய்
ஆகிக்கொண்டிருந்த
அமைதிப் பூக்கள் !
நாங்கள்
முசல்மான்கள் !
மல்லிகையாய்
மனதுக்குள்
மணப்பவர்கள் !
மனுசர்களுக்கும்
மனசாட்சியே
இல்லாதவர்களுக்கும் கூட
பூக்கடையாய் இருந்து
முகவரி
தேடித் தந்தவர்கள் !
சாக்கடையைத் தேடிப் போகும்
அரசியல்
கழிசடைகளின்
மொட்டைத் தலைகளுக்கு
இனி மேலும்
நாங்கள் தரப்போவதில்லை
மலர் மகுடம் !
-அஷ்ரப்அதில் முள்ளிருக்கும் !
நாங்கள் தாமரையைப் போலுமல்ல
அதை சூடவும் முடியாது
அதன் வாசனையை சுவைக்கவும் முடியாது !
நாங்கள் அரளிப் பூக்களுமில்லை
கவர்சிகாட்டி மயக்கும்
கனகாம்பரமுமில்லை !
நாங்கள்
வெள்ளை மனம் கொண்ட
பிச்சிப்பூக்கள் !
பலகாலம்
குரங்கு கை பூக்களாய்
ஆகிக்கொண்டிருந்த
அமைதிப் பூக்கள் !
நாங்கள்
முசல்மான்கள் !
மல்லிகையாய்
மனதுக்குள்
மணப்பவர்கள் !
மனுசர்களுக்கும்
மனசாட்சியே
இல்லாதவர்களுக்கும் கூட
பூக்கடையாய் இருந்து
முகவரி
தேடித் தந்தவர்கள் !
சாக்கடையைத் தேடிப் போகும்
அரசியல்
கழிசடைகளின்
மொட்டைத் தலைகளுக்கு
இனி மேலும்
நாங்கள் தரப்போவதில்லை
மலர் மகுடம் !
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home