வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா......
ஆண்டு ஜோகன்ஸ்பர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரி யாகவும், எஸ்டேட் ஏஜெண்டாகவும் வேலை பார்த்தார்.
அப்போது நோமதாம் சங்கர் என்ற நர்சை திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென் ஆப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது.
5 ஆண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958.ம் ஆண்டு வின்னி மடிகி லேனா என்பவரை மணந்தார். வின்னி தலைவரின் கொள்கைகளுக்காக போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகள்; 2 வது மனைவி மூலம் 2 குழந்தைகள்.
தென்ஆப்பிரிக்க (கறுப்பர் இன) தலைவர் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்தபின் விடுதலை செய்யப்பட்டார். தென்ஆப்பிரிக்க நாட்டில் கறுப்பர்கள் (நீக்ரோக்கள்) பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அங்கு வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் ஆட்சி பீடத்தில் வெள்ளையர்களே அமர்ந்தார்கள்.
கறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக “ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்” என்ற கட்சி உருவானது. அதன் தலைவரான நெல்சன் மண்டேலா, இன வெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து போராடினார்.
அரசாங்கம் கடுமையாக கெடுபிடி செய்ததால் 1961 ம் ஆண்டில் மண்டேலா தலைமறைவானார். அவரை பிடிக்க வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. 1962 ம் ஆண்டு மண்டேலா கைது செய்யப்பட்டார்.
தென்ஆப்பிரிக்க அரசை கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964 ம் ஆண்டு ஜுன் 12 ந்தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது.
பல ஆண்டுகள் அவரை தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென்ஆப்பிரிக்க அரசாங்கம். மனைவியை சந்திப்பதற்குகூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988 ம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.
மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென்ஆப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார்.
மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட் டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.
“மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்” என்று தென்ஆப்பிரிக்க அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். தென்ஆப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக டெக்ளார்க் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார்.
இதனால் மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது. மண்டேலா 11.2.1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று ஜனாதிபதி டெக்ளார்க் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
மண்டேலா 1962.ல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது. விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71.
மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா சார்பாக பிரதமர் வி.பி.சிங் தலைமையில் வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. தென்ஆப்பிரிக்க அரசாங்கம் அறிவித்தபடியே 11.2.1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.
மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.
ஏராளமான தொண்டர்கள் ஆப்பிரிக்க கொடியை அசைத்த படி வரவேற்றனர். சிலர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மண்டேலாவும், அவரது மனைவியும் கூடியிருந்தவர்களை நோக்கி கையை உயர்த்தி வரவேற்பை ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் மண்டேலாவை போலீசார் பாதுகாப்பாக கேப்டவுன் நகருக்கு அழைத்துச்சென்றனர். சிறைச் சாலையின் வாசலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த டெலிவிஷன் மற்றும் புகைப்பட நிபுணர்கள் அவரை படம் எடுத்தனர். மண்டேலா விடுதலையான நிகழ்ச்சி தென்ஆப்பிரிக்க நாடு முழுவதும் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
மண்டேலா விடுதலையானதும், பிரதமர் வி.பி.சிங் அவருக்கு பாராட்டு தெரிவித்தார். மண்டேலா விடுதலையான சிறிது நேரத்தில் அவரிடம் பிரதமர் வி.பி.சிங் எழுதிய பாராட்டுக் கடிதம் கொடுக்கப் பட்டது. “உங்களது சுதந்திர போராட்டத்துக்கு இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும் என்று வி.பி.சிங் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலக தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்கு திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-
“இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வ தேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது.
நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயக ரீதியில் தேர்ந்து எடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்.
உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளை பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு “நேரு சமாதான விருது” வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதை பெற்றார்.மண்டேலாவின் தியாகம் வீண் போகவில்லை.1994 மே 10 ந் தேதி அவர் தென் ஆப்பிரிக்காவின் அதிபர் ஆனார்.
அவர் அதிபர் ஆனபின், 1998 ம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத், உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
நிறவெறி
ஆட்சியை எதிர்த்து 27 ஆண்டுகள் சிறையில் போராடியவர்!
பாரத ரத்னா மற்றும் நோபல்
பரிசை பெற்ற மண்டேலா ...
ஜோகன்ஸ்பர்க்: தென்ஆப்ரிக்காவில் நிறவெறியை ஆட்சியை ஒழித்து கறுப்பின மக்களுக்கு அதிகாரம் பெற்று தந்த நெல்சன் மண்டேலா தனது 95 வயதில் காலமானார். தென்னாப்பிரிக்காவில் குனு கிராமத்தில் 1918ம் ஆண்டு ஜுலை 18ம் தேதி பிறந்த மண்டேலா, தனது 95வது வயதில்
ஜோகன்ஸ்பர்க் நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதை தென்னாப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா தொலைக்காட்சி
மூலம் உலக நாடுகளுக்கு அறிவித்தார். நுரையீரல் தொற்று நோய் காரணமாக கடந்த ஜுன் மாதம் பிரிட்டோரியா மருத்துவமனையில் மண்டேலா
அனுமதிக்கப்பட்டார். மண்டேலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாததால்
அவரது இல்லத்திலேயே வைத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தான் மரணித்த பின்னர் தனது சொந்த கிராமத்தில் தன்னை அடக்கம் செய்ய மண்டேலா விருப்பம் தெரிவித்திருந்ததால், அவரது விருப்பம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. தென்னாப்பிரிக்க நாடு பெருமை வாய்ந்த குடிமகனை இழந்துவிட்டது என்று வருத்தம் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர், முழு அரசு மரியாதையுடன் மண்டேலாவின் இறுதி ஊர்வலம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிரன அடக்குமுறைகளை எதிர்த்து, ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் ஆட்சியில் இணைந்து தீவிரமாக போராடிய மண்டேலாவை 1964ல் நிறவெறி வெள்ளையர் அரசு சிறையில் அடைத்தது. 27 ஆண்டுகளுக்குப் பின் 1990ல் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலையோடு கறுப்பின மக்களுக்கும் நிறவெறி வெள்ளையர் ஆட்சியிலிருந்து விடுதலை கிடைத்தது. தென்ஆப்ரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த முதல் அதிபராகவும் மண்டேலா தேர்ந்தெடுக்கப்பட்டார். மண்டேலா சிறையிலிருந்த போதே அவருக்கு நேரு சமாதான விருதையும், 1990ல் பாரத ரத்னா விருதையும் வழங்கி இந்தியா கௌரவித்தது. 1993ல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. 2 மனைவிகளை கொண்ட மண்டேலாவிற்கு 5 பிள்ளைகள் உள்ளனர். தென்ஆப்ரிக்க பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்து இந்தியா மீதான அளவற்ற பற்றை வெளிபடுத்திய மண்டேலாவின் செயல்பாடு மறக்க இயலாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
தான் மரணித்த பின்னர் தனது சொந்த கிராமத்தில் தன்னை அடக்கம் செய்ய மண்டேலா விருப்பம் தெரிவித்திருந்ததால், அவரது விருப்பம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. தென்னாப்பிரிக்க நாடு பெருமை வாய்ந்த குடிமகனை இழந்துவிட்டது என்று வருத்தம் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர், முழு அரசு மரியாதையுடன் மண்டேலாவின் இறுதி ஊர்வலம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிரன அடக்குமுறைகளை எதிர்த்து, ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் ஆட்சியில் இணைந்து தீவிரமாக போராடிய மண்டேலாவை 1964ல் நிறவெறி வெள்ளையர் அரசு சிறையில் அடைத்தது. 27 ஆண்டுகளுக்குப் பின் 1990ல் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலையோடு கறுப்பின மக்களுக்கும் நிறவெறி வெள்ளையர் ஆட்சியிலிருந்து விடுதலை கிடைத்தது. தென்ஆப்ரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த முதல் அதிபராகவும் மண்டேலா தேர்ந்தெடுக்கப்பட்டார். மண்டேலா சிறையிலிருந்த போதே அவருக்கு நேரு சமாதான விருதையும், 1990ல் பாரத ரத்னா விருதையும் வழங்கி இந்தியா கௌரவித்தது. 1993ல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. 2 மனைவிகளை கொண்ட மண்டேலாவிற்கு 5 பிள்ளைகள் உள்ளனர். தென்ஆப்ரிக்க பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்து இந்தியா மீதான அளவற்ற பற்றை வெளிபடுத்திய மண்டேலாவின் செயல்பாடு மறக்க இயலாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home