இது ஓர் உண்மை சம்பவம்....!!
இது ஓர் உண்மை சம்பவம்....!! எனது நண்பர் ஃபாரூக் என்பவரின்
தாயாருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு மயக்கம் வந்து உடல்நிலை சரியில்லை என்று தமிழ்நாடு காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவம் பார்க்க தஞ்சாவூருக்கு சென்றபோது... குறிப்பிட்ட சதவீதம் தான் நாங்கள் இலவசமாக பார்ப்போம், குறிப்பிட்ட சதவீதம் நீங்கள் பணம் கட்ட வேண்டும், அப்படி இப்படி என்று நிறைய விதிகள் வகுத்துள்ளார்கள். இறுதியாக பெங்களூருக்கும்
அருகாமையிலுள்ள NH (Narayana Health) நாராயணா ஹெல்த் என்ற பெயரில் இயங்கி வரும்
மருத்துவமனைக்கு சென்று... தமிழ்நாடு காப்பீடு திட்டம் அட்டையை
காண்பித்தவுடன் முழு சதவீதமும் இலவச மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளது. சிறப்பான மருத்துவம், கூடுதல் கவனிப்பு என்று அனைத்திலும் சிறப்பாக செய்து வருகிறார்கள். தற்போது தாயார் நலமுடன் இருக்கிறார். இந்த மருத்துவமனையில் நோயாளி மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். நோயாளியின் உறவினர்கள் வெளியில் தான் ரூம் வாடகைக்கு எடுத்து தங்க வேண்டும். அதேபோல் அந்த மருத்துவமனை வளாகத்தில்
அனைத்து மதத்தினரும் வணக்க வழிபாடு நடத்த இட வசதி செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட கூடிய சகோதரர்கள் இந்த மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து கொள்ளுங்கள். Narayana Hrudayalaya Hospital, No.258/A,
Bammasandra Industrial Area, Anekal Taluk, Bangalore - 560099 Cell : 95913
00353 Tel : 080-7122 2222 (அவ்வாறு அந்த மருத்துவமனைக்கு செல்வதாக இருந்தால் மட்டும்) இந்த மருத்துவமனை பற்றிய முழு விவரம் தேவையென்றால் நம்மை இன்பாக்ஸில் தொடர்பு கொள்ளவும்... நண்பரின் மொபைல் நம்பரை தருகிறேன்,
கூடுதல் தகவலை அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள். மனிதர்கள் மீது இரக்கம் காட்டுங்கள்,
இறைவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான் (நபிகள் நாயகம் - ஸல்)
-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home