13 December 2013

இஸ்லாத்தில் சிறந்த செயல் எது ?


இஸ்லாத்தில் சிறந்த செயல் எது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ஒரு மனிதர் கேட்டார்.

அதற்கு பதிலளித்த நபிகள் நாயகம்....

தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் முதலில் சலாம் சொல்வதும், பசித்தவர்களுக்கு உணவளிப்பதும் இஸ்லாத்திலேயே சிறந்த செயல் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

இந்த போட்டோவில் காணும் கடை  துபையில் உள்ள கடை...

அங்குள்ள வாசகம்...

உங்களுக்கு உணவு வாங்க பணம் இல்லையென்றால் இங்கு அடுக்கியிருக்கும் பானங்களோ அல்லது குப்புஸ் பாகெட்டோ ஒரு நபருக்கு ஒன்றை இலவசமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

என்று எழுதியுள்ளது.

யா அல்லாஹ்...

பலரது பசியை போக்கிய இந்த கடை முதலாளிக்கு உனது பரக்கத்தை விசாலப்படுத்துவாயாக...

நன்றி : முஹம்மது ரியாஸ்

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home