19 December 2013

அல்லாஹ்வின் அற்புதம் - நீரின் வடிவமைப்பு.

உலகிலுள்ள அனைத்து அங்கிகளினதும் வாழ்க்கைக்கு நீர்அத்தியாவசியமானதாகும்.மனித உடலில் ஏறத்தாள 70சதவீதம்நீர் காணப்படுகின்றது.இதே போல் அனைத்து உயிரினங்களும்பெரும்பகுதி நீரைக் கொண்டுள்ளது. நீரின்றி உயிர்வாழ்வது உலகில்உள்ள அனைத்து வஸ்துக்களுக்கும் சாத்தியமற்றதாக காணப்படுகின்றது.

பொதுவாக திரவாங்கள் கட்டியாகும் போது கீழிருந்து மேலாகவே கட்டியாகின்றது.ஆனால் நீரானது மேலிருந்து கீழாகவே கட்டியாகின்றது. இச்செயற்பாடானது நீரின் விசேட தன்மையாகும். 4பாகை செல்சியஸ் வெப்பநிலையில் நீரானது சடுதியான மாற்றமடையும் வரை பாரமடையும்.

இதன்விiவாக 4பாகை செல்சியஸ் வெப்பநிலையில் உள்ள நீரானது அடிப்பாகத்தை வந்தடையும்.4பாகை செல்சியஸ் வெப்பநிலைகுக் குறைந்தவெப்பநிலையிலுள்ள நீரானது,4பாகை செல்சியஸ் வெப்பநிiயில் உள்ள நீருக்கு மேலே வரும்.அதவாது 3பாகை செல்சியஸ் வெப்பநிலையில் உள்ள நீர் மேலாகவும்,2 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் உள்ள நீர் அதற்கு மேலாகவும் வரும்.மேற்பரப்பில்
காணப்டும் நீரானது 0 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும்.இவ்வெப்பநிலையில் நீர் ஒடுங்கி பனிக்கட்டியாக மாறும்.எனவே அடிப்பாகத்தில் இருக்கும் நீரானது .4பாகை செல்சியஸ் வெப்பநிலையில் தொடர்ச்சியாக இருக்கும்.

இதனால் நீருக்கடியில் வாழும் உயிரினங்ளுக்கு தொடர்ச்சியாக வாழ்வதற்கு போதுமான வசதி கிடைக்கின்றது.
அல்ஹம்துலில்லாஹ்,பனிப்பிரதேசங்களில் வாழும் கடல்வாழ் உயிரினங்கள் எப்படி வாழ்கின்றன என்பதை நாம் சில வேளை சிந்தித்து இருப்போம்.வல்ல நாயன் அல்லாஹ் நீருக்கு வழங்கியுள்ள சிறப்பியல்பான செயற்பாட்டைக் கொண்டு நீர்வாழ் உயரினங்களின் வாழ்வுக்கு ஏற்ற சூழலை உருவாக்கியுள்ளான்.

இன்னும் அவன் எத்தைகயவனென்றால், வானத்திலிருந்து நீரை உங்களுக்கு இறக்கி வைத்தான். அதிலிருந்து குடிப்பும் உங்களுக்கு உண்டு,அதிலிருந்து வளர்ந்த மரங்களும் உங்களுக்கு உண்டு,அதில் உங்கள் கால்நடைகளை நீங்கள் மேய்க்கிறீர்கள்.அதனைக் கொண்டே விவசாயப் பயிர்களையும்,ஜைத்தூன், பேரீட்சை,திராட்ச்சைகளையும் இன்னும் பல வகைக் கனிகளிலிருந்தும் அவன் உங்களுக்காக முளைப்பிக்கச் செய்கிறான்.நிச்சயமாக இதில் சிந்திக்கக்கூடிய கூட்டத்தாருக்கு ஓர் அத்தாட்சி இருக்கின்றது.

(சூரா அந்நஹ்ல்: 10,11)
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home