5 December 2013

தாய் மரிக்கவில்லை... தாய்மை மரித்துவிட்டது...



இந்த புகை படத்தை பார்த்து என் கண்கள் கலங்கியது என்னால் சற்று உற்று கூட பார்க்க முடியவில்லை எதோ ஒரு புகைப்படம் தேடும் பொது இது தென்பட்டது என்னமோ என்று பார்க்கையில் இப்படி ஒரு கோர சம்பவம் என்னை துக்கத்தில் ஆழ்த்தியது.
கல்லறை சுகத்தை தந்தவர் யாரோ?
காற்றுக்கு நாங்கள் பாரமா?
கருவுற்றது எங்கள் குற்றமா?
கண் இமைகள் கூட விழிக்காத எங்களுக்கு
கருவறை சுகம் கல்லறையானதே!
கட்டில் சுகம் அவர்களுக்கு,
கல்லறை துக்கம் எங்களுக்கு பரிசாக
காவு வாங்கியவர்கள் காமத்தில்
கழுகுக்கும் காக்கையும் இறையாக்கினார்கள்
கல்நெஞ்சுக்காரர்கள் வாழும் இந்த உலகத்தில்.
தாய் மரிக்கவில்லை...
தாய்மை மரித்துவிட்டது...
இந்த மாதிரி ஈன செயலை செய்தவர்கள் வாழ தகுதி இல்லாதவர்கள் அவர்கள் மறித்து விடுவது நல்லது
கட்டில் சுகத்திற்கு குழந்தைகளை காவு வாங்கும் இவர்கள் மிருகத்திடம் கூட ஒப்பிடுதல் முடியாது அவைகளுக்கு கூட இரக்கம் இருக்கும் இரக்கமற்ற இந்த மனிதர்கள் இருப்பதைவிட சாவதே மேல்...!
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home