அட இந்தியாவில் இப்படியும் ஒரு 'ஏழை முதல்வர்'
இவரை போன்ற சுயநலமில்லாத மக்கள் நலனில்
அக்கறை கொள்ளும் மனிதர் பிரதமராக வருவது நாட்டிற்கு சிறந்ததா அல்லது மக்களில் வாழ்க்கை தரத்தில்
மோசமான இருக்கும் குஜராத்தை போலியான வளர்சி
என்ற கோஷத்தை ஊடகங்களின் மூலம் தொடர்சியாக பரப்பி கார்பரேட் என்னும் பண முதலைகளின் நலனில் மட்டும்
அக்கறை செலுத்தும் மோடி சிறந்தவரா??
அட இந்தியாவில் இப்படியும் ஒரு 'ஏழை முதல்வர்'
குவாஹாத்தி: நாட்டிலேயே திரிபுரா மாநில முதல்வர் மானிக் சர்க்கார் தான் மிகவும் ஏழ்மையான முதல்வர் ஆவார். ஏழை முதல்வர் என்று தன்னை பிறர் கூறுவதில் அவர் பெருமை கொள்கிறார். திரிபுரா மாநில சட்டசபை தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. இந்த தேர்தலிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று மானிக் சர்க்கார் தொடர்ந்து நான்காவது முறையாக முதல்வர் ஆனார். முன்னதாக அவர் கடந்த ஜனவரி மாதம் வேட்புமனு தாக்கல் செய்தபோது தனது சொத்து விவரங்களையும் தெரிவித்திருந்தார். அவரது சொத்து மதிப்பை நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வேட்புமனு தாக்கல் செய்தபோது சர்க்காரின் கையில் வெறும் ரூ.1,080 ரொக்கம் மட்டுமே இருந்தது. அவரது வங்கிக் கணக்கில் ரூ.9,720 இருந்தது.
சர்க்காரின் அம்மா அஞ்சலி சர்க்காருக்கு சொந்தமான டின் ஷெட் வடிவில் உள்ள 432 சதுர அடி வீடு அவருக்கு கிடைத்தது. அதன் தற்போதைய மதிப்பு ரூ.2 லட்சத்து 20,000 ஆகும்.
மானிக் சர்க்காரின் மனைவி பாஞ்சாலி பட்டாசார்யா மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெறும்போது அவருக்கு கிடைத்த பணத்தை வைத்து வைப்புத் தொகையில் ரூ.23 லட்சத்து 58 ஆயிரத்து 380 வைத்துள்ளார். மேலும் அவரிடம் ரூ.72,000 மதிப்புள்ள 20 கிராம் தங்கம் உள்ளது.
மானிக் சர்க்கார் மற்றும் அவரது மனைவியிடம் அசையும் சொத்துக்களே இல்லை. அவர்களின் அசையா சொத்து மற்றும் பண இருப்பு மொத்தம் ரூ. 24 லட்சத்து 52 ஆயிரத்து 395 ஆகும்.
வேட்புமனு தாக்கல் செய்தபோது மானிக்கின் மாத சம்பளம் ரூ.9,200. அதையும் அவர் அப்படியே கட்சியிடம் அளித்துவிடுவார். கட்சி அவருக்கு மாதாமாதம் ரூ.5,000 செலவுக்கு அளிக்கும்.
என்னுடைய பொருளாதார நிலை குறித்த செய்திகளை ரசித்து படிக்கிறேன். என்னை ஏழை முதல்வர் என்று அழைப்பதில் பெருமை கொள்கிறேன். நான் எளிமையாக இருக்க கட்சி தான் காரணம் என்று அடக்கமாக தெரிவித்தார் மானிக் சர்க்கார்.
மாணிக் சர்காரின் சிறந்த சாதனைகளில் ஒன்று கடந்த 10 ஆண்டுகளில் நாட்டிலேயே 10 இடத்தில் இருந்த திரிபுராவின் கல்வி நிலையை தற்போது கேரளாவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு கொண்டு வந்துள்ளார்..இது நிட்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று..இதே இடத்தில் கேடி மேனியாவின் குஜராத்தின் கல்வியின் நிலை என்பது 15 இடங்களுக்கும் அப்பால் என்பது குறிப்பிடத்தக்கது..
-அஷ்ரப்அட இந்தியாவில் இப்படியும் ஒரு 'ஏழை முதல்வர்'

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home