20 December 2013

ஊழல், லஞ்சத்தில் சென்னை இரண்டாவது இடத்தில்..

இந்தியாவும் ஒளிர்கிறது, தமிழ்நாடு, குஜராத், உபி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களும் ஒளிர்கிறது.

இந்தியா வளர்கிறது. லஞ்ச, ஊழல்களும் வளர்கிறது.

தேசியப் பறவை, தேசிய விளையாட்டு போன்று இந்தியாவின் தேசிய உணவு லஞ்சம் மற்றும் ஊழல் என்றால் மிகையாகுமோ?

லஞ்சம் ஊழலில் நம்பர் 1 நகரம் பெங்களூரு.

நம்பர் 2. சென்னை.

ஐ பெய்ட் பிரைப் டாட் காம் என்ற லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான வலைத்தளம் இந்தியாவின் லஞ்சம், ஊழல் தலை விரித்தாடும் 10 நகரங்களை புள்ளிவிவரங்களுடன் வெளியிட்டுள்ளது.,

இந்த வலைத்தளம் பெங்களூரில் செயல்பட்டு வருகிறது.

சுமார் 22,000 பேர் லஞ்சம் கொடுப்பதையும், லஞ்சம் வாங்குவதையும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

சாமானிய மக்களிடம் இந்த சர்வே செய்யப்பட்டுள்ளது.

10வது இடத்தில் மோடியின் குஜராத் உள்ளது.

கீழ் வரும் புள்ளிவிவரங்கள் தினசரி புழங்கும் லஞ்ச லாவண்யமா, அல்லது ஆண்டுக் கணக்கா அல்லது
மாதக் கணக்கா என்பது தெரியவில்லை.

10. அகமதாபாத் (குஜராத்)

மொத்த லஞ்சம் - ரூ. 27,26,910. லன்ச லாவண்ய எண்ணிக்கை - 210; நேர்மையான அதிகாரிகள் - 6 பேர்.

9. நொய்டா (உ.பி.)

மொத்த லஞ்சம் : ரூ.36,76,990; லஞ்ச எண்ணிக்கை - 192; நேர்மையான அதிகாரிகள் - இல்லவேயில்லை.

8. லக்னோ (உபி)

மொத்த லஞ்சம்: 1,60,19,588; லஞ்ச எண்ணிக்கை - 241; நேர்மையான அதிகாரிகள் - 3

7. கொல்கட்டா (மேற்குவங்கம்)

மொத்த லஞ்சம் : ரூ.1,63,33,425; லஞ்ச எண்ணிக்கை - 344, நேர்மையான அதிகாரிகள் 7

6. புனே (மஹாராஷ்டிரா)

மொத்த லஞ்சம் : ரூ.1,34,54,056; லஞ்ச எண்ணிக்கை - 865; நேர்மையான அதிகாரிகள் - 34

5. ஐதராபாத் (ஆந்திரப்பிரதேசம்)

மொத்த லஞ்சம் : 2,93,38,123; லஞ்ச எண்ணிக்கை 1376; நேர்மையான அதிகாரிகள் 46.

4. தலைநகரம் டெல்லி

மொத்த லஞ்சம் : ரூ.4.41,43,879; லஞ்ச எண்ணிக்கை - 912; நேர்மையான அதிகாரிகள் - 38.

3. மும்பை (மகாராஷ்டிரா)

மொத்த லஞ்சம் - ரூ.6,98,20,521; லஞ்ச எண்ணிக்கை 1385, நேர்மைஒயான அதிகாரிகள் 52.



2. சென்னை (தமிழ்நாடு)

மொத்த லஞ்சம்- ரூ.7 கோடியே 50 லட்சத்து 16 ஆயிரத்து 228

லஞ்ச எண்ணிக்கை - 1278

நேர்மையான அதிகாரிகள் - 54;

1. பெங்களூரு (கர்நாடகா)

மொத்த லஞ்சம் : 16,62,75,467.

லஞ்ச எண்ணிக்கை : 5,350

நேர்மையான அதிகாரிகள் - 278
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home