16 March 2014

எப்போதும் மாடிப்படிகளை பயன்படுத்துவதால் கிடைக்கும் வியக்கத்தக்க உடல்நல நன்மைகள்



இப்போதெல்லாம் லிஃப்ட்டுகள் வேலை செய்யவில்லை என்றால் மட்டுமே அனைவரும் படிகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் லிஃப்ட்களுக்கு பதிலாக படிகளை பயன்படுத்தினால் தான் நேர்மறையான பல பயன்களை நாம் பெறுகின்றோம். அனைத்து வகையான பயிற்சியை விட, இது மிகவும் சிறந்த பயிற்சியாக விளங்குகிறது. ஜாக்கிங், சைக்கிளிங், நீச்சல், டென்னிஸ் மற்றும் இதர பயிற்சிகளில் எவ்வளவு நேரம் செலவிட்டாலும், உடலில் உள்ள கலோரிகளை எரிக்கவும் இதயத்தை திடப்படுத்தவும் படி ஏறுவது தான் சிறந்த பயிற்சியாக விளங்குகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி தெரியப்படுத்தியுள்ளது. அதனால் படி ஏற தொடங்கி அதன் பயனை பெற்றிடுவோம். வண்டியை ஓரங்கட்டிட்டு, நடராஜா சர்வீஸூக்கு மாறினாஉடம்புக்கு எவ்வளவு நன்மை தெரியுமா!!! இதயம் மற்றும்
நுரையீரலுக்கு நல்லது படி ஏறுதல் உங்களை பல விதத்தில் காக்கும். உதாரணத்திற்கு உங்கள் இதயம் மற்றும் நுரையீரலை பாதுகாப்பாக வைத்திடும். திடமான நுரையீரல், அதிக அளவிலான ஆக்சிஜனை உள்ளிழுக்க உதவும். அதே போல் திடமான இதயம், ஆக்சிஜன் நிறைந்த இரத்தத்தை தசை நார்களுக்கு வேகமாக எடுத்துச் செல்ல உதவும். அதனால் நீங்களும் நன்றாக உணர்வீர்கள். உடல் எடை குறையும் படி ஏறுவதால் உடல் எடை குறைந்து, உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்படும். எளிய உடற்பயிற்சி படி ஏறுதல் என்பது செலவில்லாமல் செய்யக்கூடிய உடற்பயிற்சியாகும். இதனை செய்வதற்கு பயிற்சியாளர் கட்டணம், கருவிகள் வாங்குதல், என்று பணம் செலவிட தேவையில்லை. படிகள் உள்ளவரை இந்த பயிற்சியை நீங்கள் செய்து கொண்டே இருக்கலாம். ஆயுளை அதிகரிக்கும் படிகள் ஏறுவதால் உங்கள் ஆயுள் அதிகரிக்கும். அதே போல் உங்கள் தசைகள் திடமாகி வலுவடையும். அதனால் காயங்கள் ஏற்படும் இடர்பாடும் குறையும். உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வாழ்க்கையின் தரத்தை பாதிக்கும் பல விதமான நோய்கள் ஏற்படும் இடர்பாட்டை குறைக்கும். கால்களை வலுவாக்கும் உங்கள் கால்கள் மற்றும் பின்புறத்தின் தசைகளின் திடத்தை மேம்படுத்தும். மன அழுத்தத்தை தடுக்கும் தினமும் மாடிப்படிகளைப் பயன்படுத்தினால், மன அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கலாம். நல்ல தூக்கம் தினமும் படிகளை பயன்படுத்தும் போது, இரவில் நல்ல தூக்கத்தைப் பெறலாம். கர்ப்பிணிகளுக்கான சிறப்பான உடற்பயிற்சி மாடிப்படிகளை ஏறுவது, மருத்துவரின் அறிவுரையுடன் கர்ப்பிணி பெண்களுக்கான சிறந்த உடற்பயிற்சி என்றும் கூறலாம். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை ஊக்குவித்து, டைப் 2 சர்க்கரை நோய் மற்றும் தீவிரமான பிற நோய்கள் ஏற்படும் இடர்பாட்டை குறைக்கும். நேரம் மிச்சம் லிஃப்ட்களில் போவதை தவிர்த்து விட்டு, படிகளை பயன்படுத்தினால், அது உடல்நலத்திற்கு நல்லது மட்டுமல்லாது சில நேரங்களில், உங்கள் நேரத்தை சேமித்து, ஆற்றல் திறன் பயன்பாட்டையும் குறைக்கும். குறிப்பாக கூட்டம் அதிகமாக நேரத்தில் லிஃப்ட்களை பயன்படுத்தினால் உங்கள் தளத்திற்கு வர நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். மாறாக படியை பயன்படுத்தினால் வேகமாக வந்து சேரலாம்.
நன்றி: உங்களுக்காக

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home