வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாமா?
பார்லர் ஃபேஷியல்
எனக்குப் பிடிப்பதில்லை. வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாமா? எப்படிச் செய்வது?
செய்முறையை விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் ஸ்ருதி...
ஒரு கப்பில் நாலு டீஸ்பூன் பால், 3 டீஸ்பூன் ரவையை எடுத்து மிக்ஸ் செய்தால் ‘ஸ்க்ரப்’ போல வரும். அதை முகத்தில் அப்ளை செய்யவும். 10 நிமிடம் மசாஜ் செய்யவும். பிறகு முகத்தைக் கழுவி விடவும். பிறகு, வெள்ளரிக்காய் சாறு - 2 டீஸ்பூன், தேன் - 5 துளி, மசித்த வாழைப்பழம் - 2 டீஸ்பூன் என எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.
வெதுவெதுப்பான நீரில் முகத்தைக்கழுவவும். அதன் பிறகு முல்தானிமிட்டி, கடலை மாவு, உளுந்து மாவு - இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்து அதனுடன் புதினாச்சாறு கலந்து ‘ஃபேஸ் பேக்’ போட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். இது வறண்ட சருமம் உள்ளவர்களுக்கான பேக். எண்ணெய்ப்பசை சருமமாக இருந்தால் ஆரஞ்சு ஜூஸ், பச்சை திராட்சை ஜூஸ், லெமன் ஜூஸ், தக்காளி ஜூஸ் ஆகியவற்றை சம அளவில் எடுத்து முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.
நார்மல் சருமமாக இருந்தால் ஆப்பிள் அல்லது பப்பாளிப் பழத்துடன் பால் சேர்த்து மசித்து முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இதை வாரம் ஒருநாள் செய்தால் பார்லருக்குப் போக வேண்டிய அவசியம் இருக்காது. முகம் பளிச்சென இருக்கும்!
-செய்முறையை விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் ஸ்ருதி...

அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home