8 March 2014

அழகான நகங்களைப் பெற வழி என்ன?



எனக்கு நகங்கள் வளர்க்க வேண்டும் என்று ஆசை. ஆனால், நகங்கள் வலுவிழந்து போய் இருக்கின்றன. அழகான நகங்களைப் பெற வழி என்ன?

யோசனை சொல்கிறார் பியூட்டீஷியன் அனிதா...  

நகங்களை வைத்தே நம் ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகிறது. அதனால், நகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். நகத்தில்  ஈரப்பசை இல்லாவிட்டால் வலுவிழந்து போய் விடும். அதனால் நகங்களில் அவ்வப்போது ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயில் தடவி  வரவேண்டும். இரவில் தூங்குவதற்கு முன் ஆலிவ் ஆயிலை மிதமாகச் சூடுபடுத்திநகங்களில் தடவினால் நன்கு உறுதியாக வளரும்.

அடிக்கடி நெயில் பாலீஷ் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. குறைந்தது வாரம் ஒரு நாளாவது நெயில் பாலீஷ் போடாமல் விட்டுவிடவும். பிராண்டட்  நெயில் பாலீஷ், ரிமூவர் உபயோகிப்பது சிறந்தது. டிடர்ஜென்ட் பவுடர்களுக்கு நகத்தை வலுவிழக்க வைக்கும் தன்மை இருக்கிறது. அதனால் குறைந்த  அளவிலேயே டிடர்ஜென்ட் பயன்படுத்துங்கள்.

எலுமிச்சைப் பழத் தோல், உரித்த பூண்டு இவற்றை நகங்களில் தேய்த்து வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும். இதை 2 நாட்களுக்கு ஒரு முறை  செய்யலாம். ஒரு டீஸ்பூன் சர்க்கரை, 3 டீஸ்பூன் தேன் இரண்டையும் கலந்து நகங்களில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்த பிறகு நகங்களைக்  கழுவவும். இப்படி சில நாட்களுக்குத் தொடர்ந்து செய்தால் நகங்கள் ஆரோக்கியமாக வளரும்.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home