ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். கை ஓங்குகிறது
சிரியா எல்லை பகுதியை கைப்பற்றியது ஐ.எஸ்.ஐ.எஸ்.
பாக்தாத்: ஈராக்,சிரியா எல்லையில் உள்ள பகுதியை ஈராக் அரசுக்கு எதிராகப் போராடி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு கைப்பற்றியது. இதன் மூலம் சிரியா வழியாக தனக்குத் தேவையான ஆயுதங்களைக் கொண்டு வர அமைப்புக்கு
சுலபமான வழி கிடைத்துள்ளது.
அமைப்புக்கு
எதிராகப் போராடி வரும் ஈராக் அரசுக்கு இது கடும் நெருக்கடியை
ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரை, அரசியல்
ரீதியாகத்தான் சமாளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா, ஈராக்கின்
ஷியா முஸ்லிம் பிரிவு தலைவர் ஆகியோர் கூறியுள்ள நிலையில், பதவியிலிருந்து
விலக வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளார் ஈராக் பிரதமர் நூர் அல் மாலிகி.
ஈராக்கில் ராணுவத்துக்கு எதிராக சன்னி முஸ்லிம் பிரிவினர், ஐ.எஸ்.ஐ.எஸ்.
என்ற அமைப்புடன் இணைந்து சண்டையிட்டு வருகின்றனர்.
ராணுவத்துக்கு ஆதரவாக ஷியா முஸ்லிம் பிரிவினர் போராடி வருகின்றனர். நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள பல்வேறு நகரங்களை கைப்பற்றியுள்ளனர். ராணுவத்திடமிருந்து பறிமுதல் செய்த ஆயுதங்களுடன் அவர்கள் ராணுவத்துக்கு எதிராக போராடி வருகின்றனர். ஷியா முஸ்லிம் பிரிவினர் பெரும்பான்மையாக உள்ள பல பகுதிகளை கைப்பற்றியுள்ளனர். இந்த போரில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பு தேடி வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். அதைத் தவிர 40 இந்தியர்கள் உள்பட பல வெளிநாட்டினரை கடத்தி வைத்துள்ளனர். தலைநகர் நோக்கி வேகமாக நகர்ந்து வரும் isis தடுத்து நிறுத்த வான்வெளி தாக்குதல் நடத்த உதவும்படி அமெரிக்காவை ஈராக் அரசு கோரியது. ஆனால் தனது படைகளை திரும்ப அனுப்புவதில்லை என்று அமெரிக்கா உறுதியுடன் கூறியுள்ளது.
இந்த நிலையில் ஈராக்கின் நினேவா மாகாணத்துக்கும், சிரியாவின் அல்,ஹசேகா மாகாணத்துக்கும் இடைப்பட்ட மிகப் பெரிய பகுதியை isis கைப்பற்றியுள்ளனர். அப்போது நடந்த சண்டையில் ராணுவத்தைச் சேர்ந்த 30 பேர் கொல்லப்பட்டதாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள மிகப் பெரிய மணல்குன்றை தகர்த்து, சிரியாவிலிருந்து ஈராக்குக்கு சுலபமாக வந்து செல்ல isis வழி செய்துள்ளனர். ஏற்கெனவே சிரியாவில் இயங்கிவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு, தற்போது சிரியாவிலிருந்து ஆயுதங்களை சுலபமாக ஈராக்கிற்கு கொண்ட வர வழி ஏற்பட்டுள்ளது.

tanks;Athila Parsa Madarasi
_அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home