16 September 2014

இன்றைய டிப்ஸ்...


நாம் பார்த்துட்டு போனாலும் பார்க்காமல் போனாலும் நம்மை படைத்த இறைவன் நம்மை பார்த்துக் கொண்டேதான் இருக்கிறான்.
*
வாழ்வதற்காகவே சாப்பிட வேண்டும். சாப்பிடுவதற்காகவே வாழக் கூடாது.
*
உன் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலைப்படாதே... நீ அவர்களுக்கு இரண்டு அடி முன்னால் இருக்கிறாய் என பெருமைப்படு.
*
பொறுமை இல்லாதவன் கூட ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியும். ஆனால் பொறுப்புள்ளவன்தான் ஒரு நல்ல தகப்பனாக முடியும்.
*
பசியில் வாடும் வாய்க்கு ருசி தெரிவதில்லை. ருசி தேடும் நாக்கிற்கு பசிக்கொடுமை புரிவதில்லை.
*
முயற்சி என்பது விதை போல்... அதை விதைத்துக் கொண்டே இருங்கள். முளைத்தால் மரம், இல்லையேல் அது மண்ணிற்கு உரம்.
*
ஒருவரை வேதனைப்படுத்தி நாம் காணும் இன்பம்... பிணத்தை பார்த்து சிரிப்பதற்கு சமம்.
*
உழவர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் உங்களால் சோற்றில் கை வைக்க முடியும்.
*
இருப்பவனுக்கு எது கிடைத்தாலும் அது அலட்சியம்... இல்லாதவனுக்கு எது கிடைத்தாலும் அது அதிசயம்.
*
சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் நமக்கு வேண்டும்.

-
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home