ஆதார் அட்டைக்கு ரூ.1200 கோடி மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஆதார் அடையாள அட்டை திட்டத்துக்கு ரூ.1200 கோடி நிதி ஒதுக்க மத்திய
அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.இந்திய குடிமகன்கள் அனைவருக்கும்
நாடு முழுவதும் செல்லக்கூடிய அடையாள அட்டை வழங்க கடந்த ஐக்கிய முற்போக்கு
கூட்டணி அரசு ஆதார் திட்டத்தை கொண்டு வந்தது. ஆதார் அட்டைக்காக ஒருவரது
கைரேகை மற்றும் கருவிழிகள் பதிவு செய்யப்பட்டன.இதற்கு பல்வேறு மனித உரிமை
அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. குடிமகன்களின் சுதந்திரம்
பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் மத்தியில் ஆட்சி
மாற்றம் ஏற்பட்டு பாஜ தலைமையில் புதிய அரசு அமைந்தது. இதனால் ஆதார் திட்டம்
தொடருமா என கேள்வி எழுந்தது.இந்நிலையில் ஆதார் திட்டம் தொடரும் என மத்திய
அரசு அறிவித்தது. இதற்காக கடந்த பட்ஜெட்டியில் நிதியும்
ஒதுக்கப்பட்டது.இந்நிலையில் ஆதார் திட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பது
குறித்து கடந்த சனிக்கிழமை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
நடத்தினார்.
இதன்பின்னர் நேற்று அவரது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆதார் திட்டத்துக்காக ரூ. 1200 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.ஆதார் திட்டத்தின் கீழ் இதுவரை நாடு முழுவதும் 67 கோடி பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டுக்குள் 100 கோடி பேருக்கு அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக கருதப்படும் உ.பி.யில் மொத்தமுள்ள 20 கோடி பேரில் 4.6 கோடி பேருக்கு மட்டுமே ஆதார் அட்டை கிடைத்துள்ளது. இதே போல் 10.38 கோடி மக்கள் தொகை கொண்ட பீகாரில் 1.4 கோடி பேருக்கு மட்டுமே ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள நிதி உ.பி., பீகார் போன்ற ஆதார் பின்தங்கிய மாநிலங்களில் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.
-அஷ்ரப்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home