நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடக்கவில்லை: மருத்துவர்களை ஏமாற்றி தப்பினார் - மீண்டும் நீதிமன்றத்தை நாடும் போலீஸார்
ஆண்மை பரிசோதனைக்கு நித்யானந்தா ஒத்துழைக்கவில்லை; இதனால் ஆண்மை பரிசோதனையே நடக்கவில்லை என்று கூறி, மீண்டும் நீதிமன்றத்தை நாட கர்நாடக சிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந்தா வின் முன்னாள் சீடர் ஆர்த்தி ராவ் அவர் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்தார்.இவ்வழக்கில் ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைக்கும்படி நித்யானந்தாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து அவருக்கு கடந்த திங்கள்கிழமை பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையிலும், மடிவாளா தடயவியல் ஆய்வகத்திலும் சுமார் 6 மணி நேரம் ஆண்மை பரி சோதனை நடைபெற்றது. ‘’அனைத்து பரிசோதனைகளுக்கும் நித்யானந்தா ஒத்துழைத்தார். அடுத்த 48 மணி நேரத் திற்குள் கர்நாடக சிஐடி போலீஸாரிடம் ஆண்மை பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிப்போம்’’ என தலைமை மருத்துவர் துர்கண்ணா தெரிவித்தார்.
ஆனால் வியாழக்கிழமை மாலை வரை நித்யானந்தாவின் ஆண்மை பரிசோதனை சான்றிதழ் சமர்ப்பிக்கப் படவில்லை. தாமதத்திற்கான காரணத்தையும் விக்டோரியா மருத்துவமனை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் ஆண்மை பரி சோதனையில் ஒத்துழைக்காமல் நித்யா னந்தா நாடகம் போட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நித்யானந்தாவின் நாடகங்கள்
இதுதொடர்பாக கர்நாடக சிஐடி போலீஸார் ‘தி இந்து'விடம் கூறிய தாவது: திங்கள்கிழமை காலை 7 மணிக்கு ஆண்மை பரிசோதனைக்கு எதுவும் சாப்பிடாமல் வர வேண்டும் என நித்யானந்தாவிற்கு மருத்துவர்கள் முன்கூட்டியே தெரிவித்தனர்.ஆனால் அவர் காலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு 7.30 மணிக்கு வந்தார். ரத்த பரி சோதனை, சிறுநீரக பரிசோதனை செய் யப்பட்டது. அவர் ஏற்கெனவே சாப் பிட்டு வந்ததால் அந்த பரிசோதனை முடிவுகளும் சரியாக கிடைக்கவில்லை.
இந்த இரு பரிசோதனையால் தனக்கு களைப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆதலால் ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும் என கோரினார். அதனைத் தொடர்ந்து அரை மணி நேரம் நித்யானந்தா ஓய்வெடுத்தார். அதன்பிறகு மனநல மருத்துவர் அவரி டம் உளவியல் சோதனை நடத்தினார்.
ஆண்மை பரிசோதனையில் முக்கியமாக கருதப்படும் சில சோதனைகளுக்கு நித்யானந்தா ஒத்துழைக்க மறுத்துவிட்டார். தனக்கு இருதய நோய் இருக்கிறது. கடந்த மாதம் கூட லேசான மாரடைப்பு ஏற்பட்டது. எனவே எனது அந்தரங்க பகுதிகளில் ஊசிபோட்டால் மீண்டும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதனால் எனது உயிர் போக வாய்ப்பிருக்கிறது.ஆதலால் ஊசி போட அனுமதிக்க மாட்டேன் என மறுத்துவிட்டார்.
'இது தான் முக்கிய பரிசோதனை. உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து நடந்துகொள்ளுங்கள்' என மருத்துவர் கள் துர்கண்ணா, கேசவமூர்த்தி, சந்திரசேகர் ரத்கல், வெங்கடராகவ், வீரண்ணா கவுடா, சந்திரசேகர் ஆகியோர் நித்யானந்தாவை வற்புறுத்தியுள்ளனர்.
அதற்கு நித்யானந்தா 'என் உடம்பில் எங்கெங்கு ஊசி போடலாம் என உச்ச நீதிமன்றம் உங்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறதா? அதனைக் காட்டுங்கள். இல்லாவிட்டால் பரிசோத னைக்கு ஒத்துழைக்க முடியாது' என அடம்பிடித்துள்ளார். இதனால் மருத்துவர்கள் கர்நாடக சிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் லோகேஷிடம் முறையிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பல மருத்துவர்கள் வலுகட்டாயமாக நித்யானந்தாவின் உடைகளை கழற்றி, சோதனை நடத்த முயன்றனர். அப்போது, அவர் சத்தமாக கூச்சல் போட்டு,ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைக்க முடியாது. என்னைக் கட்டாயப்படுத்தி பரிசோதனை செய்ய முயற்சித்தால், தேவையற்ற விபரீதங்களை சந்திக்க நேரிடும் எனக்கூறி தனது வழக்கறிஞரையும், உதவியாளர்களையும் அழைத்தார்.
திடீரென மயங்கி விழுந்த அவருக்கு ஒன்றரை மணி நேரம் ஓய்வு அளிக்க வேண்டும் என அவரது உதவியாளர்கள் கூறினர். அதன் பிறகு ஓய்வெடுக்க அனுமதித்தோம்.
தகாத வார்த்தைகளால் திட்டினார்
இறுதிவரை நித்யானந்தா ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைக்க முடியாது என தெரிவித்ததால் மருத்துவர்கள் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தவில்லை. ஒத்துழைக்க மறுப்பதற்கான காரணங்களை தன் கைப்பட 7 பக்கங்களில் நித்யானந்தா விரிவான கடிதமாக எழுதி கொடுத்தார். அதனை வாங்கிக் கொண்டு அவருக்கு தங்களால் சோதனை நடத்த முடியாது என விக்டோரியா மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிஐடி போலீஸ் அதிகாரிகள் நித்யானந்தாவிடம் பேச முயன்றபோது, அவர்களிடம் பேச மறுத்துவிட்டார். அவ்வப்போது நித்யானந்தாவின் வழக்கறிஞர்களும் உதவியாளர்களும் குறுக்கிட்டு தொந்தரவு செய்தனர். நித்யானந்தாவை கண்டிக்கும் தொனியில் அதிகாரிகள் பேசிய போது, அவரும் உரத்த குரலில் தகாத வார்த்தைகளால் எங்களை திட்டினார். அவர் தமிழில் பேசியதால் எதுவும் புரியவில்லை.
வாயில் மாத்திரை போட்டு மிமிக்ரி
ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைக்காததால் நித்யானந்தாவை லெனின் கருப்பன் வழக்கில் குரல் பரிசோதனை செய்ய மடிவாளா தடயவியல் ஆய்வகத்துக்கு கொண்டு சென்றோம். அப்போது வாயில் சில மாத்திரைகளை உள்ளடக்கி வைத்துக் கொண்டு வேறு குரலில் பேசினார். அதனை போலீஸார் கண்டறிந்து துப்ப சொல்லிய போது, 'வாயில் எதுவும் இல்லை' என மறுத்தார்.
ஆடியோவில் பதிவான குரலுக் கும் தற்போதைய குரலுக்கும் வித்தி யாசத்தை காட்ட வேண்டும் என்பதற் காக வாயில் மாத்திரைகளை வைத்துக் கொண்டு நித்யானந்தா மிமிக்ரி செய்தார். 10 நிமிடங்கள் பேசியவர், இதற்கு மேல் தன்னால் பேச முடியாது என மறுத்துவிட்டார். ஆண்மை பரி சோதனைக்கு முழுமையாக ஒத் துழைக்காததால், மீண்டும் நீதிமன் றத்தை நாட முடிவு செய்திருக்கிறோம்'' என்றார்.அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home