நெஞ்சில் முள் குத்தியது !!
நண்பர்களே இந்த புகைபடத்தை இணையத்தில் பார்த்து விட்டு நெஞ்சில் முள் குத்தியது போன்று ஒரு உணர்வு எனக்குள் ஏற்படுகின்றது.
சகோதரர்களே தயவு செய்து அலச்சியம் வேண்டாம்.உங்கள் குழந்தைகளை படுக்க வைக்கும் முன் அந்த இடத்தை நன்றாக பார்த்த பின்பு படுக்க வையுங்கள்.
இங்கு வலிக்கின்றது இங்கு எரிகின்றது என்று சொல்ல நம்மால் தான் முடியும் இது போன்று பேசத் தெரியாத மழலை முகம் மாறாத இந்த பிஞ்சு என்ன செய்ய முடியும், அது துடிப்பதை பார்த்துவிட்டு நம்மால்தான் என்ன செய்து விட முடியும்...
வேதனையை தாங்குவது அந்த பிஞ்சு அல்லவா..!!
அலச்சியம் வேண்டாம் இது போன்று பூச்சி கடிகளில் சில வேலை குழந்தைகள் இறந்தும் விடுகின்றது .எத்துனையோ விஷயங்களில் முகநூலில் நாம் முன்னிறுத்தி வருகின்றோம் . அதே போல இந்த பதிவையும் பகிருங்கள்... பகிர்வது மட்டுமில்லாமல் உங்கள் மனைவி மற்றும் குடும்பத்திற்கும் சொல்லி கொடுங்கள் குழந்தையை படுக்க வைக்கும் முன் நன்றாக துணிகளை உதறச் சொல்லுங்கள்...
உங்களுக்கு திருப்தி ஏற்படுகின்ற வரையிலும் அந்த இடத்தை சுத்தம் செய்து விட்டு, அப்புறம் உங்கள் குழந்தைகளை படுக்க வைக்க சொல்லுங்கள்...
இரவில் குழந்தை அழுதால் பாலுக்காக அழுகின்றது
என்று அலட்சியமாக இருந்து விட வேண்டாம்.விளக்கை போட்டு பார்த்து விட்டு பிறகு அழுகையை அடக்கி உறங்க வையுங்கள்...
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home