‘ஸ்டேட்டஸ்’ போடுவதற்கு முன் உஷார்! சமூக வலைதள பதிவை வைத்து வேலைக்கு ஆட்கள் தேர்வு
பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை
நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், வேலைக்கு ஆட்கள் தேர்வு
செய்யும் நிறுவனங்கள், படிப்பு, அனுபவம் அடிப்படையில் மட்டும் இல்லாமல்,
வேலைக்கு விண்ணப்பித்துள்ளவர் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ள
விவரங்களை வைத்து, அவரை வேலைக்கு சேர்ப்பதா வேண்டாமா என முடிவு செய்கின்றன
என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வேலை வாய்ப்பு தொடர்பாக வெப்சைட்
நடத்திவரும் நிறுவனம் சமீபத்தில் ஆய்வு நடத்தியதில் இது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு நாடு முழுவதும் சுமார் 1,200 நிறுவனங்களில் நடத்தப்பட்டுள்ளது.
59% நிறுவனங்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி தகவல்கள் சேகரிக்கின்றன.
இவர்களில் 68% நிறுவனங்கள், தாங்கள் வேலைக்கு எடுக்கும் நபர் சமூக வலை
தளங்களில் என்ன பதிவு செய்துள்ளார் என்றெல்லாம் ஆராய்ந்து, சரியில்லாத
பட்சத்தில் வேலை வழங்க மறுத்துள்ளன.
மேலும், 33% நிறுவனங்கள் எதிர்காலத்தில் இந்த முறையை பின்பற்ற முடிவு செய்துள்ளன. 75% நிறுவனங்கள் வேலைக்கு ஆள் தேட கூகுள் போன்றவற்றை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. படிப்பு பற்றி பொய்யான தகவல்கள் கொடுத்திருப்பதன் மூலம் 50% பேருக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது. வலைதளத்தில் தகவல்களை கோர்வையாக பதிவு செய்யாததால் 50% பேருக்கு வேலை கிடைக்கவில்லை. தகவல் தொடர்பு திறன் இல்லை என்ற காரணத்துக்காக வேலை மறுக்கப்பட்டுள்ளது. அதுபோல், கோபமூட்டும் வகையில் அல்லது பொறுத்தமற்ற வகையில் தகவல்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்ட காரணத்துக் காக 47% பேருக்கும், முன்பு பணிபுரிந்த நிறுவனம் பற்றிய ரகசிய தகவல்களை வெளியிட்டதற்காக 42% பேருக்கும் வேலை கிடைக்கவில்லை என்று இந்த ஆய்வு கூறுகிறது. அதுமட்டுமின்றி போதைப்பொருள், குடிப்பழக்கம் பற்றி வெளியிட்டவர்கள் 38% பேரும், கிரிமினல் நடவடிக்கை உள்ளதாக 35% பேரும், முந்தைய நிறுவனம் பற்றி மோசமாக விமர்சித்தவர்கள் 32% பேரும் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர் என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
‘சமூக வலைதளத்தில் வெளியிட்ட தகவல்கள் வேலைக்கு விண்ணப்பித்தவரின் பின்னணி, தோற்றம், நிறுவன கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பாரா என்பன போன்ற விவரங்களை அறிய உதவுகின்றன‘ என பெரும்பாலான நிறுவனங்கள் ஆய்வின்போது கூறியுள்ளன. எனவே, வேலை தேடுபவராக இருந்தாலும், வேறு நிறுவனத்துக்கு மாற முயற்சிப்பவராக இருந்தாலும் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்யும்போது மிக கவனமாக இருக்கவேண்டும் என்று எச்சரிக்கிறது இந்த ஆய்வு நிறுவனம்.
-அஷ்ரப்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home