16 September 2014

கணக்கு பண்ணுங்க...

பெருக்கல் கணக்குகளில் உள்ள சுலப முறைகளை காணும் வரிசையில் இரண்டிலக்க எண்ணுடன் மற்றொரு இரண்டிலக்க எண்ணை பெருக்கும் எளிய முறையினை இங்கு காணலாம்.

==> பெருக்கல் செய்ய வேண்டிய இரண்டிலக்க எண்களின் கடைசி இலக்கங்கள் இரண்டையும் முதலில் பெருக்கிக் கொள்க.

உதாரணமாக 53 ஐ 26 என்ற, இரண்டிலக்க எண்ணுடன் பெருக்க, முதலில் இரண்டு எண்களிலும் உள்ள கடைசி எண்ணாண 3 மற்றும் 6 ஐ பெருக்கிக்க கொள்ள வேண்டும். இதில் விடையாக வரும் 18-ல் ஒன்றாம் இலக்க மதிப்பான 8 ஐ எடுத்தெழுதி 1 ஐ மீதியாக கணக்கில் கொள்க.
==> 8

===> அடுத்து, பெருக்க வேண்டிய நான்கு எண்களையும் குறுக்கு பெருக்கல் முறையில் பெருக்கி பின் அவற்றை கூட்டிக் கொள்க. அவற்றுடன் ஏற்கனவே வைத்துள்ள மீதியை கூட்டி வரும் விடையில் மீண்டும் ஒன்றாம் இலக்க எண்ணை மட்டும் எடுத்தெழுதி பத்தாம் இலக்க எண்ணை மீதியாக கொள்க.

53
* 26
---- ல் 5 ஐ 6 உடனும், 3 ஐ 2 உடனும் பெருக்கி வரும் இரண்டு விடையையும் கூட்டிக்கொள்க.

5 * 6 = 30
3 * 2 = 6
இப்போது இரண்டையும் கூட்ட 30 + 6 = 36, இதனுடன் மீதியாக உள்ள 1 ஐ சேர்க்க வரும் 37ல் ஒன்றாம் இலக்கமான 7 ஐ எடுத்தெழுதி பத்தாம் இலக்க எண்ணாண 3 ஐ மீதியாக கொள்க.
==> 7

===> இறுதியாக பெருக்க வேண்டிய எண்ணில் உள்ள பத்தாம் இலக்க எண் இரண்டையும் பெருக்கிக் கொண்டு, வரும் விடையுடன் ஏற்கனவே உள்ள மீதியையும் கூட்டி எழுத விடை மிகச்சரியாக கிடைத்து விடுகிறது.

53 * 26 ல் 5 ஐ 2 உடன் பெருக்க 5 * 2 =10, இதனுடன் மீதியாக உள்ள 3 ஐ சேர்க்கும் போது, வரும் 13 உடன் ஏற்கனவே நாம் கண்ட எண்களான 7 மற்றும் 8 ஐ எழுத, 1378 என சரியான விடை வந்து விடுகிறது.

மற்றுமொரு உதாரணமாக,
45 * 78 = ?
(5 * 8) = 40, ==> 0, மீதி 4,
(4 * 8) + (5 * 7) = 67, மீதி 4ஐ கூட்ட ===> 1, மீதி 7
(4 * 7) = 28, மீதி 7ஐ கூட்ட ===> 35, கண்ட விடைகளை சேர்த்து எழுத, 3510.,
ஃ 45 * 78 = 3510...

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home