16 September 2014

ரெசியூம் தயாரிக்க சில டிப்ஸ்

மாணவர்களில் இருந்து பணி அனுபவம் பெற்றவர் வரை வேலைக்காக விண்ணப்பிக்க 'ரெசியூம்' தயார் செய்வது அவசியம். ' ரெசியூம்' 'கரிகுலம் வீட்டே'(சி.வி.,) என்று அழைக்கப்படும். இதை தயார் செய்வதில் அதிக கவனம் தேவை. விண்ணப்பதாரரை பார்க்காமல், அவரை அடையாளம் கண்டு கொள்ள ' ரெசியூம்' உதவுகிறது. இதை சிறப்பாக தயாரித்து, தேர்வாளரை கவர்ந்தாலே பணி ஓரளவுக்கு உறுதியாகி விடும்.

* ரெசியூம் தயாரிக்கும் சில வழிமுறைகள்:

இரண்டு பக்கத்துக்கு உள்ளாக ரெசியூமை முடித்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் படிக்க யாருக்கும் நேரம் இருக்காது. அதற்குள் தங்களது முழு விவரத்தையும் பதிவு செய்து விடுங்கள்.

* நீங்கள் எந்த பணிக்கு விண்ணப்பிக்க உள்ளீர்கள் என்பதை தெளிவாக முதலில் கூறி விட வேண்டும். உங்களது தனித்திறமைகளை பற்றி சிறு அறிமுகத்தையும் முதலில் பதிவு செய்யலாம்.

* உங்களது இமெயில் முகவரி, மொபைல் எண் போன்ற முக்கிய தகவல்களை பேன்சியான எழுத்துக்களில் குறிப்பதை தவிர்க்கவும். தெளிவாக புரியும் எழுத்து வகைகளை மட்டுமே பயன்படுத்தவும். இமெயில் முகவரியை தேவையில்லாத வார்த்தைகளை கொண்டு உருவாக்குவதை தவிர்ப்பது நல்லது.

* பிராக்டிகல், புராஜக்ட் போன்றவற்றை குறிப்பிடும் போது அதன் தலைப்பு, முக்கிய அம்சத்தை மட்டும் குறிப்பிட்டாலே போதும்.

* விளையாட்டு வீரராக இருந்தால் குழு விளையாட்டா அல்லது தனிநபர் விளையாட்டா என்பதை வித்தியாசப்படுத்தி காட்ட வேண்டும்.

* உங்களது தனித்திறமையை தெளிவாக குறிப்பிட வேண்டும். ஒரு வரிக்கு மிகாமல் இருந்தால் சிறப்பாக இருக்கும். எல்லா விவரங்களும் சுருக்கமாகவும், தெளிவாகவும் இருக்கும்படி பார்த்து கொள்வது அவசியம்.

* ஒரு நிறுவனத்துக்கு ரெசியூமை அனுப்பும் போது கையெழுத்திடாமல் அனுப்ப கூடாது. இடம், தேதி, ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும். நிறுவனம் புகைப்படம் கேட்டிருந்தால் அதையும் ஒட்டி அனுப்ப வேண்டும்.

* தங்களது படிப்பு விவரத்தை குறிப்பிடும் போது, நிறுவனத்துக்கு தகுந்தபடி குறிப்பிடவும். சில நிறுவனங்களுக்கு பள்ளிப்படிப்பு முதல் குறிப்பிட வேண்டி இருக்கும். சில நிறுவனங்களுக்கு அதிகபட்ச படிப்பை கூறினாலே போதும். எது தேவையோ அதை மட்டும் குறிப்பிடவும்.

* குறிப்பிட்ட கால அளவுக்குள் ரெசியூமை அப்டேட் செய்வது அவசியம். பயிற்சி வகுப்புகள் முடிக்கும் போதும், பணி அனுபவம் கூடும் போதும் அப்டேட் செய்வது நலம்.

-
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home