12 September 2014

யோகாவிற்கு முன்னதாக சில விஷயங்கள்

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் உணர்வுள்ள உடற்பயிற்சியில் ஒன்றாக யோகா விளங்குகிறது. தியானம், சுவாச முறைகள், வெவ்வேறான அங்க  அசைவுகள் உள்ளிட்ட எளிமையான உடற்பயிற்சிகள் யோகாவில் உள்ளது. யோகாவை சரியான முறையில் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு  மிகவும் நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மிகவும் கவனத்துடன் யோகாவில் ஈடுபட வேண்டும் என்பதும் நிபுணர்களின்  எச்சரிக்கையாக உள்ளது. இல்லையெனில் யோகா உடல் ரீதியான குழப்பங்களுக்கும் வழி வகுத்துவிடும். உடலில் உள்ள அங்க அவயங்களின்  ஆரோக்கியத்தை மேம்படுத்-துவதற்கும் யோகா முறைகள் உள்ளன. யோகாவிற்கு முன்னதாக சில விஷயங்களை அறிந்துகொள்வோம்.

யோகா செய்வதனால் பல்வேறு பலன்கள் உள்ளன. நீண்ட நாட்களாக இருந்து வரும் முதுகுவலியை கூட யோகாவினால் சரி செய்ய வாய்ப்பு  உள்ளது. இருதயநோய்க்கும், இரத்த அழுத்தம் சீராகவும், மனஅழுத்தம், பயத்தை போக்கவும் யோகா உதவும்.

சில உடல் நிலைகள் காரணமாக யோகாவினால் பலன்கள் முழுமையாக கிடைக்கும் என்றும் கூறிவிட முடியாது. ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு  யோகா சிறந்ததாக இருக்க முடியாது.

ஒவ்வொருவரின் உடல்நிலை, வயதுக்கு ஏற்ப யோகாவை தேர்வு செய்ய வேண்டும். உயர்ந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள், குளுக்கோமா  நோயுள்ளவர்கள், கர்ப்பிணிகள் கடினமான யோகா பயிற்சியை தவிர்க்க வேண்டும்.

மிகவும் கவனத்துடனும் பாதுகாப்புடனும் யோகா பயிற்சியை செய்ய வேண்டும். ஒவ்வொருவரின் உடல் ரீதியான நிலையில் வேறுபாடுகள்  காணப்படும். எனவே ஒவ்வொருவரும் அதற்கு ஏற்ற வகையில் யோகா முறைகளை தேர்வு செய்ய வேண்டும்.

பயிற்சியாளரின் முன்னிலையில் அவரது வழிகாட்டுதலுடன் யோகா செய்வது நல்லது. ஏதேனும் உடல் ரீதியான பிரச்சனைகள் இருப்பின்  முன்கூட்டியே அதனை பயிற்சியாளரிடம் தெரிவித்து விட வேண்டும்.

யோகா பயிற்சிக்கு செல்லும் முன்னர் உடல்நிலையை பற்றி தெரிந்துள்ள மருத்துவரையோ, ஆரோக்கியம் சார்ந்த நிபுணரையோ அணுகி அவர்களிடம்  இருந்து உடல் நிலைகுறித்த ஒரு முடிவுக்கு வரவேண்டும். அதன் பின்னர் அதன் அடிப்படையில் யோகாவை தேர்வு செய்ய வேண்டும்.

யோகாவில் ஈடுபடும் போது காட்டன் உடைகள் அணிவது நல்லது. இது உடல் அசைவுகக்கு எளிமையாக இருக்கும்.. இறுக்கமான உடைகள்  அணிவதை தவிர்க்க வேண்டும். யோகா செய்ய தொடங்கும் முன்னர் ஒரு கப் தண்ணீர் குடிப்பது நல்லது-. இது உடல் வியர்த்து தளர்வடையாமல்  இருக்க செய்யும்.
 
யோகாவில் ஈடுபடும் போது உடல் ரீதியாக இடையூறுகள் தோன்றினால் உடனே நிறுத்திவிட்டு ஓய்வு எடுக்கவேண்டும். உணவு சாப்பிட்டு 2 மணி  நேரம் கடந்த பின்னரே யோகாவில் ஈடுபட்டு வந்த உடன் வயிறு முட்ட சாப்பிடுவதும் நல்லதல்ல. உடற்பயிற்சிக்கு பின்னர் ஓய்வு எடுக்க  மறுக்ககூடாது. அதற்கேற்ப பயிற்சிகளை செய்தால் கூட போதும. கடுமையான காய்ச்சல், போன்ற உடல் பாதிப்புகள் இருந்தால் யோகாவை தவிர்க்க  வேண்டும்.  

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home