பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை
தைராய்டு பாதிப்பு :பெண்களின் உடலில்
தைராய்டு சுரப்பி குறையும். குறைந்தால் உடல் பருமன் ஏற்படும், தலைமுடி
கொட்டும். சிலருக்கு தைராய்டு சுரப்பு அதிகமாகும். அதிகமானால் உடல்
இளைக்கும், படபடப்பு, வயிற்றுபோக்கு ஏற்படும். இவற்றை தவிர்க்க தைராய்டு
பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தைராய்டு பாதிப்புகளை மருந்து,
மாத்திரைகளால் 100 சதவீதம் குணப்படுத்தலாம்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் : உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. வைரஸ் தொற்று நோய் கிருமியால் ஏற்படும் இந்த புற்றுநோய் தாக்குதலை கண்டறிய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இந்நோய் தற்போது வெகுவாக குறைந்துவிட்டது. பாதுகாப்பான உடலுறவு குறித்த விழிப்புணர்வே காரணம். எனினும் 3 ஆண்டுக்கு ஒரு முறை 55 வயது வரை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 55 வயதிற்கு பிறகு கர்ப்பப்பை புற்றுநோய் வர வாய்ப்பில்லாததால் அதற்கு பின்னர் பரிசோதனைகள் தேவையில்லை.40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு தைராய்டு, கர்ப்பப்பை புற்றுநோய், எலும்பு பலவீனம், மார்பக புற்றுநோய் அதிகம் தாக்கும் வாய்ப்புள்ளது. இதை முன்கூட்டியே உரிய பரிசோதனைகள் மூலம் கண்டறிந்தால், பாதிப்புகளை தடுக்கலாம்.
எலும்பு பலவீனம் : மாதவிடாய் (மெனோபாஸ்) பிரச்னைகளால் மனநிலை மாற்றம், உடல் வலி ஏற்படும். அப்போது எலும்பு பலமிழக்கும், தேய்மானம் ஏற்படும் அதை கண்டறிய எலும்பு அடர்த்தி பரிசோதனை செய்ய வேண்டும். இது பாஸ்மியர் டெஸ்ட் என்றழைக்கப்படுகிறது. இதன் மூலம் கால்சியம் குறைபாட்டை கண்டறிந்து சரி செய்யலாம். எலும்பு முறிவு ஏற்படுவதை தடுக்கலாம்.
மார்பக புற்றுநோய் : மார்பக புற்றுநோய் தாக்கும் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதால் மேமோக்ராம் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். ஹார்மோன் பாதிப்புகளால் ஏற்படும் இந்நோயை கண்டறிய அதிகபட்சம் 3 ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும். இதனால் மார்பக புற்றுநோயை துவக்கநிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளலாம். 55 முதல் 60 வயதிற்கு பிறகு மார்பக புற்றுநோய் ஏற்படுவது குறைவதால் அதற்கு பிறகு பரிசோதனை செய்ய வேண்டியதில்லை.மேலும் உடல் பருமனுள்ள, மன அழுத்தமுள்ள பணியில் இருக்கக்கூடிய, ரத்த கொதிப்பு, ரத்த கொழுப்பு உள்ளவர்கள் நீரழிவு, இதய பாதிப்பு உள்ள சந்ததியை சேர்ந்தவர்கள் கட்டாயம் முன்னெச்சரிக்கை முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். நோய்களை துவக்க நிலையிலேயே கண்டறிந்தால் சரி செய்யலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
-அஷ்ரப்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home