பெர்ப்யூமை தேர்வு செய்வது எப்படி?
மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதை அனைவரும்
ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும். பேக்கிங்கைப் பார்த்து பெர்ப்யூமை தயாரித்த
கம்பெனி, தரமான கம்பெனியா என்று முதலில் கவனிக்க வேண்டும். காலாவதியான
தேதியையும் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். வாசனை திரவியத்தை முகர்ந்து
பார்க்கும்போது, சிறிது அடித்து பார்க்கவும்.
பெர்ப்யூம் எத்தனை வகைகள் உள்ளன?
சாக்லெட், ஆரஞ்சு, ஜாஸ்மின், ரோஸ், என பல நறுமணங்களில் பெர்ப்யூம் சந்தைகளில் கிடைக்கின்றன. ஆயில் ஸ்கின், ட்ரை ஸ்கின், நார்மல் ஸ்கின்னுக்கு ஏற்றவாறு பெண்கள் தேர்வு செய்யலாம்.
பாடி ஸ்பிரே வேறு, பெர்ப்யூம் வேறு?
பாடி ஸ்பிரே எனும் வாசன திரவியத்தை நேரடியாக நம் உடலில்தான் அடித்துக் கொள்ள வேண்டும். உடைகளில் அடித்துக்கொள்வது சரிவராது. அதே போல் பெர்ப்யூம் எனும் வாசனை திரவியத்தை நேரடியாக உடலில் அடிக்கக்கூடாது. ஏனென்றால், பெர்ம்யூமில் இருக்கும் ஆசிட் கன்டென்ட் நேரடியாக உடலில் பட்டால் சருமம் பாதிக்கப்படும். அதேபோல் துணிகளிலும் அடிக்கக்கூடாது. துணிகளில் உள்ள வண்ணங்கள் அழிந்து வெளுத்துவிடும். இதற்கு காரணம் ஆசிட் கன்டெண்ட்தான்.
சிறு பஞ்சுகளில் பெர்ப்யூமை தெளித்து உடைகளில் தடவிக் கொள்ளலாம். தரமான இம்போர்ட்டட் பெர்ப்யூம்களில் இந்த பாதிப்புகள் இல்லை. பெர்ப்யூம் பாட்டில்களின் ஸ்டிக்கரிலேயே பயன்படுத்தும் முறை இருக்கும். அதைப் முக்கியமாகப் படித்துக்கொள்ளவும்.
கவனத்தில் வையுங்கள்:
சரிகை போன்ற வேலைப்பாடுடைய உடைகளில் கட்டாயம் பெர்யூமை அடிக்கக்கூடாது. அவை கறுத்துவிடும். சிலருக்கு அந்த வகை வாசனை திரவியங்கள் ஒத்துக்கொள்வதில்லை. அக்குள் பகுதியில் போடும் போது வியர்க்குரு போல் சிறு கட்டிகள் வரலாம். ஒத்துக்கொள்ளாத, அலர்ஜி ஏற்படுத்தும் பெர்ப்யூம்களை உபயோகிக்கக்கூடாது. எந்தவொரு புதுவகை பெர்ப்யூமையும் முதல் முதலாக உபயோகிக்கும்போது அதை மணிக்கட்டு பகுதியில் அடித்து 2 நிமிடங்கள் விட்டுப்பாருங்கள். எரிச்சல், தோல் அலர்ஜி ஏதும் இல்லையென்றால் அந்த பெர்ப்யூம்மை நீங்கள் பயன்படுத்த துவங்கலாம்.
பெர்ப்யூமை எங்கெங்கு பயன்படுத்த வேண்டும்?
நம் உடம்பில் வியர்வை அதிகம் சுரக்கும் இடங்கள் அக்குள், கழுத்து பின்புறம். எனவே இந்த இடங்களில் பெர்ப்யூம் பயன்படுத்தலாம். ஆனால், கழுத்து முடியிலோ, செயினிலோ படாதவாறு அடிக்க வேண்டும். இந்த வழிமுறையினை பயன்படுத்தி பெண்கள் பெர்ப்யூமை பயன்படுத்த வேண்டும்.
-அஷ்ரப்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home