குழந்தைகளின் மனச் சோர்வையும் தளர்ச்சியையும் போக்கும் வைட்டமின் “டி”
உங்கள்குழந்தைகளை
வீட்டுக்குள்ளேயே பொத்திபொத்தி
வளர்க்காதீர்கள், வீட்டைவிட்டு வெளியே
அனுப்பி விளையாட விடுங்கள், பகலில் அதிக நேரம்
வெயிலில் நடக்கட்டும் அல்லது
ஓடட்டும் என்று மருத்துவ நிபுணர்கள்
பிரிட்டனில் கூறுகிறார்கள். என்ன
காரணம்?
வெயிலில் குழந்தைகள் அதிக நேரம் இருந்தால் சூரிய ஒளி மேனியில் பட்டு உடலுக்குத் தேவைப்படும் வைட்டமின் “டி’யை ஈர்க்கும். இதனால் உடலும் மனமும் ஆரோக்கியப்படும். “என்ன மனதா?’ என்றா கேட்கிறீர்கள். ஆம் மனதுதான்.
வெயிலில் குழந்தைகள் அதிக நேரம் இருந்தால் சூரிய ஒளி மேனியில் பட்டு உடலுக்குத் தேவைப்படும் வைட்டமின் “டி’யை ஈர்க்கும். இதனால் உடலும் மனமும் ஆரோக்கியப்படும். “என்ன மனதா?’ என்றா கேட்கிறீர்கள். ஆம் மனதுதான்.
வைட்டமின் “டி’யால் தோலுக்கு நல்லது என்று மட்டும்தான் இதுவரை
கூறிவந்தார்கள். இப்போதுதான் அது மனச் சோர்வையும் தளர்ச்சியையும்கூட
போக்கும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
9 வயது முதல் 13 வயது வரையிலான 2,700 சிறார்களை
ஆய்வு செய்தார்கள். அவர்களுடைய உடலில் வைட்டமின் “டி’ எந்த அளவு
இருக்கிறது, அவர்கள் அன்றாடம்
எத்தனை மணி நேரம் வெயிலில் இருந்தார்கள்
என்று கணக்கிட்டு ஒப்பு நோக்கினார்கள்.
அதிக நேரம் வெயிலில் இருந்து
விளையாடிய, வேலை செய்த
சிறுவர்களுக்கு அந்த அளவு அதிகம் இருந்தது.
அதே போல மனச் சோர்வால் பாதிக்கப்பட்டு சுறுசுறுப்பில்லாமல்
எதையோ பறிகொடுத்தார் போல இருந்த குழந்தைகளைப் பரிசோதித்தபோது
வைட்டமின் “டி’ அளவு குறைவாக இருந்தது தெரிந்தது.
வைட்டமின் “டி’யிலேயே
2 வகை
உண்டு. டி-2, டி-3 என்று இரண்டு. அதில் டி-3 குறைவாக
இருந்தால் மனச் சோர்வும் தளர்ச்சியும் ஏற்படுகிறது. வெயிலில் மட்டும் அல்ல
வாளை மீனிலும் வைட்டமின் டி அதிக அளவில் இருக்கிறது. (அதிருஷ்டம் செய்தவர்கள்,அசைவர்கள்
அஷ்ரப்)
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home