திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் 02
அழகை விரும்புவது மனிதர்களின் இயல்பான பண்பாகும். அழகுணர்ச்சி என்பது அல்லாஹ்வின் பண்பாகவும் கருதப்படுகின்றது. இதற்கு பின்வரும் நபி மொழி ஆதாரமாக விளங்குகின்றது.
(அல்லாஹ் அழகானவன். அவன் அழகை நேசிக்கின்றான்.)
அழகை அடைந்து கொள்ளாத உள்ளம் நிறைவு பெறாது. அழகு என்பது ஒவ்வொருவரதும் பார்வை, நோக்கு, இரசனை, விருப்பு வெறுப்பு முதலானவற்றைப் பொறுத்து வேறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த வகையில் திருமணத்தின் போதும் ஒருவர் தனது துணையின் அழகை கவனத்திற் கொள்வது பிழையானதல்ல. ஒரு முறை அல்முகீரா இப்னு ஷுஃபா (ரழி) என்ற நபித் தோழர் ஒரு பெண்ணை திருமணம் முடிக்க முன்வந்தார். இது பற்றி நபியவர்களிடம் அவர் குறிப்பிட்ட போது அவர்கள் பின்வருமாறு ஆலோசனைக் கூறினார்கள்.
நீர் போய் அந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டும். அதுவே உங்கள் இருவர் மத்தியிலும் அன்பும் பிணைப்பும் நிலைப்பதற்கு வழியமைக்கும்.
திருமணம் பேசப்படும் பெண்ணைப் பார்த்து அவதாணிப்பதற்காக குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை அனுப்பி வைப்பதற்கும் ஸுன்னா அனுமதி வழங்கியிருப்பதைக் காணலாம்.
இதனால்தான் இமாம் அபூஹனிபா (ரஹ்) போன்றோர் இது விடயத்தில் மிக கண்டிப்பான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்.
ஒரு தகப்பனோ அல்லது வலி ஆக இருக்கும் மற்றொருவரோ வயது வந்த ஒரு கன்னிப் பெண்ணை திருமணத்திற்கு நிர்ப்பந்திக்க முடியாது. தகப்பனாயினும் அல்லது மற்றொரு வலியாயினும் திருமண விடயத்தில் அவளது சம்மதத்தைக் கோருதல் வேண்டும். அவள் உடன் பட்டாலேயே திருமண ஒப்பந்தம் செல்லுபடியாகும்ளூ இல்லாத போது செல்லுபடியாகாது. இது இமாம் அபூ ஹனிபா போன்றோரின் ஷரீஆ நிலைப்பாடாகும்.
ஆயினும் ஒரு கன்னிப் பெண்ணைப்பொறுத்தவரையில் அவள் அறிவு அனுபவம், முதிர்ச்சி முதலானவற்றில் குறைந்தவளாக இருக்கும் காரணத்தினால் அவளுடைய எதிர்காலம் பற்றி அவளது தகப்பன் முதலான ஷவலி மாரே தீர்மாணிக்க வேண்டும் என வேறு பல இமாம்கள் கருதுகின்றனர். இது விடயத்தில் அவளது விருப்பு வெறுப்பை அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை எனவும் கூறுகின்றனர். இக்கருத்தை உடைய இமாம்களும் அவளது சம்மதத்தைப் பெறுவது வரவேற்கத்தக்கது என்பதை வலியுறுத்துகின்றனர்.
ஒரு கன்னிப் பெண் நன்னடத்தை, குடும்பம், தொழில், சமூக அந்தஸ்த்து, பொருளாதாரம் முதலான ஒன்றில் தமக்கு தகுதியற்ற ஒருவரை திருமணம் செய்து கொள்ள முற்படும் போது அதனை ஆட்சேபித்து தடை செய்வதற்கு தகப்பன் முதலான வலிமாருக்கு உரிமையுண்டு என்பதே இமாம் அபூ ஹனிபா போன்ற அறிஞர்களும் ஏற்றுக்கொள்கின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே, ஒரு பெண்ணுக்குரிய மணவாளனை தெரிவு செய்யும் போது பெற்றோர் முதலானோர் மிகவும் விழிப்புடனும் கவனமாகவும் நடந்து கொள்ள வேண்டும். தனது பொறுப்பில் உள்ள பெண் பிள்ளையின் சார்பில் அவளுக்குரிய மணவாளனைத் தெரிவு செய்யும் போது ஷவலி கவனத்திற் கொள்ள வேண்டிய அம்சங்களை இஸ்லாம் கோடிட்டுக் காட்டியுள்ளது.
திருமணம் என்பது ஒருவகை அடிமைத்தளையாகும். எனவே ஒருவர் தனது பெறுமதிமிக்க பெண்ணை தான் யாரிடம் ஒப்படைக்கின்றார் என்பதனைக் கவனத்திற் கொள்ளட்டும் என்பது நபி வாக்காகும். (பைஹகி)
இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் பின்வரும் கூற்று கனயீர்ப்பைப் பெறவேண்டிய ஒன்றாகும்.
பெண்பிள்ளைத் தொடர்பில் மிகக் கவனமாக நடந்து கொள்வது மிகவும் முக்கியம். ஏனெனில் அவள் திருமணத்திற் கூடாக தப்பிக் கொள்ள முடியாத ஒரு வகை அடிமையாக மாறுகின்றாள். ஆனால் ஓர் ஆணைப் பொறுத்தவரையில் அவனுக்கு இலகுவில் விவாகரத்தைப் பெரும் வாய்ப்புண்டு.
இந்த வகையில் ஒருவர் தன் கீழ் இருக்கும் பெண்ணுக்கு ஒரு பாவியையோ அல்லது அநியாயக்காரனையோ அல்லது குழப்பவாதியையோ திருமணம் செய்து வைப்பது பெரும் குற்றமாகும். பிழையான தெரிவை செய்ததற்காக அவர் அல்லாஹ்வின் கோபத்திற்கும் சாபத்திற்கும் உற்பட வேண்டியிருக்கும்.
எவர் தனது பெண்ணை ஒரு பாவிக்கு திருமணம் முடித்து வைக்கின்றாரோ அவர் அவளுடனான தனது இரத்த உறவை அறுத்தவராவார் (இப்னு ஹிப்பான்) என்பது நபிமொழியாகும்.
சுருங்கக் கூறின் ஒரு பெண்ணுக்குரிய மணவாளனை தெரிவு செய்யும் போது பின்வரும் அம்சங்கள் கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும்.
மார்க்கப்பற்று, நல்லொழுக்கம், நன்னடத்தை
சன்மார்க்கக் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றாத, பாவங்களை தவிர்ந்து நடக்காத ஒரு பாவிக்கு கற்பொழுக்கமுள்ள ஒரு பெண்ணை திருமண முடித்து வைக்கலாகாது. 'பாவத்தில் விடாப்பிடியாக இருக்கும் ஒருவனுக்கு ஒரு பெண்ணை திருமணம் முடித்து வைக்கலாகாது எனக் கூறுகின்றார்கள் இமாம் இப்னு தைமியா அவர்கள்.
ஒரு முறை ஒருவர் ஹஸன் (ரழி) அவர்களிடம் வந்து, 'எனக்கொரு மகள் இருக்கிறாள். அவளை நான் யாருக்கு திருமணம் முடித்து கொடுக்கட்டும் என வினவினார். அதற்கு அவர்கள், அல்லாஹ்வை பயந்து வாழும் ஒருவருக்கு அவளை மணம் முடித்து வைப்பீராக. அத்தகையவன் அவளை விரும்பிவிட்டால் கண்ணியமாக நடாத்துவான் அவளிள் வெறுப்பு ஏற்பட்டு விட்டாலோ அவளுக்கு அநியாயம் இழைக்க மாட்டான் என்றார்கள்.
பின்வரும் நபி மொழியும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
மார்க்கத்திலும் பண்பாட்டிலும் நீங்கள் திருப்தி காணும் ஒருவர் உங்களிடம் வந்துவிட்டால் அவருக்கு உங்களது பிள்ளையை திருமணம் முடித்து வையுங்கள். அவ்வாறு நீங்கள் செய்ய வில்லையாயின் பூமியில் குழப்பமும் பெரும் சீர் குழைவும் உருவாகும்.
Jazzakallah - Sheikhagar.org
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home