5 December 2013

குஜராத் மாயைகளை மாணவர்களிடம் கலைக்கும் பு.மா.இ.மு



குஜராத்தில் வளர்ச்சி , முன்னேற்றம் என்று ஒரு அண்டப் புளுகை பேஸ்புக்கில் (face book) மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து உலாவ விட்டு வருகின்றனர்.

சென்னைக் கல்லூரி மாணவர்களிடம் புமாஇமு விநியோகித்து பிரச்சாரம் செய்யும் துண்டுப் பிரசுரம்:
குஜராத் முசுலீம் மதப் படுகொலை குற்றவாளி !
டாடா அம்பானிகளின் எடுபிடி !
இந்துமதவெறி பாசிஸ்ட் !
இந்தியாவின் ராஜபட்சே !

மோடியின் முகமுடியை கிழித்தெறிவோம்!

ன்பார்ந்த மாணவர்களே,
மோடி வளர்ச்சியின் நாயகன், குஜராத் இந்தியாவின் ரோல் மாடல் என்றெல்லாம் பி.ஜே.பி யும், பத்திரிக்கை, தொலைக்காட்சிகளும் மாயையை உருவாக்குகின்றன. குஜராத்தில் வளர்ச்சி , முன்னேற்றம் என்று ஒரு அண்டப் புளுகை பேஸ்புக்கில் (face book) மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து உலாவ விட்டு வருகின்றனர். குஜராத்தில் நடப்பது என்ன ? என்ற உண்மையை ஆதாரப்பூர்வமான புள்ளி விவரங்களோடு இதோ உங்கள் முன் வைக்கிறோம். படியுங்கள்…. சிந்தியுங்கள்! மோடியின் முகமுடியை கிழித்தெறிய வாருங்கள்!
எது பின்தங்கிய மாநிலம்? குஜராத்தா? தமிழகமா?
  • வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் ஏழைகள் குஜராத்தில் 23% தமிழகத்தில் 17% கேரளாவில் 12%.
  • கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கையில் இந்தியாவில் குஜராத்திற்கு 18வது இடம்.
  • வீடுகளுக்கு மின் இணைப்பு இந்தியாவில் குஜராத்திற்கு 16வது இடம்.
  • மாநிலத்தின் நிகர உற்பத்தி மகாராட்டிரம் முதலிடம், தமிழகம் மூன்றாமிடம், குஜராத் ஐந்தாமிடம்.
  • கடந்த 12 ஆண்டுகளில் தொழில் முதலீடுகளின் வரவில் மகாராட்டிரம் முதலிடம், தமிழகம் 4வது இடம், குஜராத் 5வது இடம்!
  • இந்தியா முழுவதும் விலைவாசி ஒன்றுதான். எனினும் தொழிலாளர்களின் சராசரி ஊதியம் குஜராத் நகர்ப்புறத்தில் 106 ரூபாய். கிராமப்புறத்தில் 86ரூபாய் ! இந்தியாவிலேயே குறைந்த ஊதியம் குஜராத்தில்தான் !
எதில் குஜராத் முதலிடம்?
  • 69% ரேசன் பொருட்கள் கடத்தி விற்கப்படும் இந்தியாவில் முதல் மாநிலம் குஜராத் !
  • சுகாதாரத்துக்காக பட்ஜெட்டில் வெறும் 0.77 % ஒதுக்கும் ஒரே மாநிலம் குஜராத் !
  • 69.7% குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள ஒரே மாநிலம் குஜராத் !
  • சுற்றுச்சூழல் கேட்டில் முதலிடம் குஜராத் வாபி நகரம் !
  • 5 லட்சம் ஏக்கர் விளை நிலங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தாரை வார்த்த ஒரே மாநிலம் குஜராத் !
  • இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் மே.வங்கம், உ.பிக்கு அடுத்து 3 வது இடம் குஜராத்!
  • ஏழைப்பெண்களின் கருப்பைகளை வெள்ளைக்காரர்களுக்கு வாடகைக்கு விட்டு அந்நியச் செலாவணி ஈட்டுவதில் உலகிலேயே முதல் மாநிலம் குஜராத் !
  • தலித் அதிகாரிகள் ஊழியர்களுக்கு தனியாக 300 சேரி அப்பார்ட்மன்ட்டுகளை உருவாக்கி இருக்கும் ஒரே நகரம் அகமதாபாத்!
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
சென்னை
போன்;9445112674








-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home