5 December 2013

"370வது பிரிவு: மோடியின் கருத்தை அரசியல் கட்சிகள் நிராகரித்தன!




புதுடெல்லி: அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு குறித்து விவாதிக்க வேண்டும் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளதை காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில், “காங்கிரஸைப் பொருத்தவரை ஜம்மு கஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு குறித்து தெளிவாகவே இருக்கிறோம்.

எனவே அது குறித்த விவாதம் எதுவும் தேவையில்லை. மோடி விரும்பினால், பாஜகவினருடனோ, சங் பரிவாருடனோ 370-வது பிரிவு குறித்து அவர் விவாதித்துக் கொள்ளலாம். மோடியின் கருத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், அவர் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி பேசி வருகிறார்.

சமீபத்திய அவரது மேடைப் பேச்சுகளில், தவறான வரலாற்றுக் குறிப்புகளையும், உண்மைக்குப் புறம்பான தகவல்களையும் அளித்து வருகிறார்என்று தெரிவித்தார்.

முப்தி முஹம்மது சயீது: முன்னதாக, ஜம்மு கஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முஹம்மது சயீது, திங்கள்கிழமை கூறுகையில், “370-ஆம் பிரிவு ஜம்மு கஷ்மீர் மாநில சட்டப் பேரவையில் அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அது அரசியலமைப்புச் சட்டத்தின் நீக்க முடியாத அங்கமாகியுள்ளது.

எனவே,அரசியலமைப்பு சட்டப்படி நாடாளுமன்றத்துக்குக் கூட அதனை விவாதிக்கவோ, நீக்கவோ அதிகாரம் இல்லை. பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளராக இருக்கும் மோடிக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றித் தெரியாமல் இருப்பது கவலை அளிக்கிறதுஎன்று தெரிவித்தார்.

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் இது குறித்து கூறுகையில், “ஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் முற்றிலும் மாறுபட்ட நிலையைக் கருத்தில் கொண்டே அந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. அதனை அந்த மாநில மக்களும் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.

இந்நிலையில் மோடி தெரிவித்துள்ள கருத்து தேசத்தை மீண்டும் துண்டாடவே வழி வகை செய்யும். எனவே 370-ஆவது பிரிவு குறித்து விவாதம் நடத்துவதோ, அதனை நீக்குவதோ முற்றிலும் தேவையற்றதுஎன்று தெரிவித்தார்.

சிபிஐ (எம்): ஜம்மு கஷ்மீர் சிபிஐ (எம்) கட்சியின் மாநில செயலாளர் எம்.ஒய். தாரிகாமி கூறுகையில், “370-ஆவது பிரிவு குறித்த மோடியின் கருத்து தேவையில்லாத ஒன்று. ஜம்மு கஷ்மீர் மக்கள் அதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்என்று கூறியுள்ளார்.

தூது இணையத்தளம் : http://www.thoothuonline.com/




"370-வது பிரிவை மோடியால் நீக்க முடியாது! ஃபரூக் அப்துல்லாஹ்

4 Dec 2013

புதுடெல்லி: கஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை, நரேந்திர மோடி 10 முறை பிரதமரானாலும் நீக்க முடியாது என மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் சமாஜ்வாதி கட்சி முன்னாள் தலைவர் அமர் சிங் வீட்டில் வைத்து இந்தியா-பாகிஸ்தான் முன்னாள் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியில் பேசிய ஃபரூக் அப்துல்லாஹ், ”370-வது பிரிவு குறித்து விவாதிக்க வேண்டும் என மோடி கூறியிருக்கிறார். ஆனால் பா.ஜ.க. இதுவரை எந்த விவாதத்திலும் ஈடுபட்டதில்லை. எனவே 10 முறை பிரதமர் பதவியில் இருந்தாலும் அவர்களால் 370-வது சட்டத்தை ரத்து செய்ய முடியாதுஎன்று தெரிவித்தார்.

கஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு, கஷ்மீர் மக்களுக்கு நன்மை அளிக்கிறதா என்பது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கடந்த ஞாயிற்றுக் கிழமை ஜம்முவில் நடைபெற்ற கூட்டத்தில் குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

தூது இணையத்தளம் : http://www.thoothuonline.com/
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home