5 December 2013

பெண்களின் முத்தம் குறித்து கொஞ்சம் அலசல்!



அன்பின் அடையாளம் முத்தம் என்பதை நிச்சயம் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஆனால் முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக் கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோதோ நிலைமை தலைகீழ்!  பலரும் முத்தங்களை சகட்டு மேனிக்கு பரிமாறிக் கொள்கிறார்கள்.

முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆய்வில் கிடைத்த பல சுவாரஸ்யமான தகவல்கள்.

* ஆண்கள் பெண்களுக்கு தரும் முத்தங்களை பெண்கள் அவர்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக கருதுகிறார்கள்.

* சுயம் அன்பையும், மகிழ்ச்சியை வெளிபடுத்தும்போதும் முத்தத்தின் மூலமே அவற்றை பெண்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர்.

* பெண்கள் முத்தத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுபதில்லை. திருமணத்துக்கு முன்பு காதலியிடம் முத்தத்தை பெற துடிக்கும் அவர்கள், திருமணத்திற்கு பிறகு, மனைவியே முத்தம் கொடுக்க தேடி வந்தாலும்கூட வேண்டாவெறுப்பாகத்தான் அதை ஏற்றுக் கொள்கிறார்களாம். நீங்கள் இந்த விஷயத்தில் எப்படி?

* செல்போனில் நீண்டநேரம் பேச அடிக்கடி சார்ஜ் செய்வது போல், தம்பதியர்களிடையே சுமூக உறவு இருக்க வேண்டுமானால் அவர்கள் அடிக்கடி முத்தம் கொடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் தம்பதிகளிடையேயான  நீண்ட கால உறவு பலமாக இருப்பதற்கு முத்த பரிமாற்றமும்  ஒரு முக்கிய காரணமாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home