நோ’ டயட்... உடல் எடை குறைக்கலாம்
நவீன உலகத்தில் உடல்
பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்னை. அதனை கட்டுப்படுத்த கடுமையான பல
டயட்டுக்களை பின்பற்றினால், உடல் எடையானது வேகமாக குறையும் என்ற எண்ணம் உள்ளது. அவ்வாறு கடுமையான டயட்டை
மேற்கொள்ளும் போது, பசியுடன் பல உணவுகளை
தியாகம் செய்ய வேண்டியிருக்கும்.
ஆனால் என்ன பயன்? காலப்போக்கில் மெதுவாக உடல் எடை மறுபடியும் கூடி விடும்.
வல்லுனர்களும் கடுமையான டயட் முறையை கையாளாமல், எளிய முறைகளின் மூலம் உடல் எடையை குறைக்க முயலுமாறு கூறுகின்றனர். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது தான். பொதுவாக அரை கிலோ கொழுப்பு என்பது 3500 கலோரிகளுக்கு சமமாகும். தினமும் டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் 500 கலோரிகளை எரித்தால் ஒரு வாரத்தில் அரை கிலோ அளவிலான எடையை குறைக்கலாம்.
தற்போது இருக்கும் எடை நீடிக்க வேண்டுமானால், தினமும் 100 கலோரிகளை எரிக்க வேண்டும். டயட்டை விட வலியில்லா வழி முறைகளை பின்பற்றுங்கள். காலை உணவை தவிர்த்தால் கலோரிகளை எரிக்கலாம் என்று பலர் தவறாக நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறு தவிர்க்கும் போது ஏற்படும் பசியானது, மற்ற வேளைகளில் அதிகமாக உண்ணத் தூண்டும். காலை உணவை தவிர்ப்பவர்களை விட அதனை சாப்பிடுகிறவர்களுக்கு பி.எம்.ஐ குறைவாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.
ஒரு கிண்ணம் நிறைய ஓட்சை நிறைத்து, அதில் பழங்கள் மற்றும் குறைவான கொழுப்பை கொண்ட பால் பொருட்களை சேர்த்து காலையில் சாப்பிட்டால் ஆரோக்கியமான நாள் தொடங்கும். சாப்பிடுவதற்கு 20 நிமிடம் என்று ஒரு நேரத்தை ஒதுக்கி மெதுவாக சாப்பிடுங்கள். இது டயட் மூலம் இல்லாமல் உடல் எடையை குறைக்க முதன்மையான வழியாகும். ஒவ்வொரு வாய் உணவையும் நிதானமாக மென்று சாப்பிட வேண்டும்.
தினமும் இரவு ஒரு மணிநேரம் கூடுதலாக தூங்கினால், ஒரு வருடத்தில் 7 கிலோ வரை உடல் எடை குறையும் என்று மிஷிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். இவரின் ஆராய்ச்சி படி, தூங்கும் போது உடல் எந்த வேலையிலும் ஈடுபடாமல் இருப்பதால், சுலபமாக 6 சதவீதம் வரை கலோரிகளை எரிக்கலாம். ஒவ்வொரு நாள் இரவும் ஒரே ஒரு காய்கறியை மட்டும் சாப்பிடுவதற்கு பதில் மூன்று காய்கறிகளை கலந்து சாப்பிடுங்கள். அதிக வகை இருந்தால் அதிகமாக சாப்பிட தூண்டும். அதனால் அதிகமான பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிட்டு உடல் எடையை குறைக்கலாம்.
ஒவ்வொரு உணவிற்கு முன்பும் சூப் குடியுங்கள். இது பசியை ஆற்றி குறைவாக உண்ண வைக்கும். கெட்டியான சூப்பை தவிர்க்கவும். ஏனெனில் அதில் அதிக கொழுப்பும், கலோரிகளும் அடங்கியிருக்கும். பிட்சா சாப்பிடும் போது மாமிசத்திற்கு பதில் காய்கறி களை தேர்வு செய்யுங்கள். இதனாலும் கூட 100 கலோரிகளை எரிக்க முடியும். சோடா போன்ற சர்க்கரை கலந்த பானங்களை பருகுவதற்கு பதிலாக, தண்ணீர் அல்லது கலோரிகள் அற்ற பழச்சாறுகளை பருகுங்கள். இதனால் ஒரு 10 டீஸ்பூன் அளவிலான சர்க்கரையை தவிர்க்கலாம்.
மதுபானத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தை விட, கலோரிகள் தான் அதிகமாக உள்ளது. அது ஒருவரது சுய கட்டுப்பாட்டை இழக்க வைப்பதால் சிப்ஸ், நட்ஸ் மற்றும் இதர நொறுக்குத் தீனியை அதிக அளவில் உட்கொள்ள வைக்கும். தினமும் 12 டம்ளர் க்ரீன் டீ பருகுவதால் கூட உடல் எடை குறையும். சீரான முறையில் யோகா செய்பவர்களுக்கு சாப்பிடுவதில் ஒரு மன கட்டுப்பாடு ஏற்படும்.
இயற்கையாகவே சிலர், ஒரு வாய் உணவிற்கும் அடுத்த வாய் உணவிற்கும் சிறிய இடைவேளை விடாமல் சாப்பிடுவார்கள். இந்த இடைவேளையில் பொறுமையாக இருங்கள், வேகமாக அடுத்த வாய் உணவை திணிக்காதீர்கள். பேசி கொண்டே பொறுமையாக தட்டை காலி செய்யுங்கள். இது வயிற்றை அடைக்காமல் பசியை போக்கும். நொறுக்குத் தீனி உண்ண தூண்டும் போது, சர்க்கரை இல்லாத வீரியம் அதிகமுள்ள சூயிங் கம்மை மெல்லுங்கள்.
உணவை நீண்ட நேரம் சமைத்தால், அதிலுள்ள ஊட்டச்சத்து அனைத்தும் வெளியேறிவிடும். போதுமான ஊட்டச்சத்து இல்லாத போது, சாப்பிட்ட திருப்தி உங்களுக்கு ஏற்படாது. ஆகவே முடிந்த வரை பச்சை காய்கறிகள் மற்றும் சாலட்களை சாப்பிட வேண்டும். அவித்த வேக வைத்த காய்கறிகள் மற்றும் மாமிசங்களை உட்கொள்ளுங்கள். குறிப்பாக மைக்ரோ ஓவனில் சமைப்பதை தவிர்க்கவும். சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு பழங்கள் சாப்பிட வேண்டும்.
இதனால் பழங்கள் வேகமாக செரிமானம் ஆகும். வெறும் வயிற்றில் பழங்களை உண்டால், உடலின் நச்சுத்தன்மை நீங்கி, அதிக ஆற்றல் கிடைத்து உடல் எடை குறையும். அதிக அளவில் சைவ உணவை உட்கொண்டால், அது உடல் எடை குறைய உதவி புரியும். அசைவ உணவை விட, சைவ உணவை சாப்பிடுகிறவர்கள் தான் வேகமாக ஒல்லியாவார்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பயறு வகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு காரணம் அதில் அடங்கியுள்ள நார்ச்சத்து.
இதில் முக்கியமானவை என்னவென்றால் 20 நிமிடங்களுக்கு 1 மைல் தூர நடை, 20 நிமிடங்களுக்கு தோட்டத்தில் களை எடுத்தல் அல்லது செடிகள் நடுதல், 20 நிமிடங்களுக்கு புல் தரையை ஒழுங்குபடுத்துதல், 20 நிமிடங்களுக்கு வீட்டை சுத்தப்படுத்துதல் அல்லது 10 நிமிடங்களுக்கு ஓடுதல். இரவு உணவை 8 மணிக்கு முன்பே சாப்பிட வேண்டும். இரவு உணவை முடித்ததும் மூலிகை தேநீர் பருகுங்கள் அல்லது பற்களை துலக்குங்கள். இதனால் உடல் எடையை குறைக்கும் பணியில் வெற்றிப் பெற போவது உறுதி.
-அஷ்ரப்வல்லுனர்களும் கடுமையான டயட் முறையை கையாளாமல், எளிய முறைகளின் மூலம் உடல் எடையை குறைக்க முயலுமாறு கூறுகின்றனர். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது தான். பொதுவாக அரை கிலோ கொழுப்பு என்பது 3500 கலோரிகளுக்கு சமமாகும். தினமும் டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் 500 கலோரிகளை எரித்தால் ஒரு வாரத்தில் அரை கிலோ அளவிலான எடையை குறைக்கலாம்.
தற்போது இருக்கும் எடை நீடிக்க வேண்டுமானால், தினமும் 100 கலோரிகளை எரிக்க வேண்டும். டயட்டை விட வலியில்லா வழி முறைகளை பின்பற்றுங்கள். காலை உணவை தவிர்த்தால் கலோரிகளை எரிக்கலாம் என்று பலர் தவறாக நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறு தவிர்க்கும் போது ஏற்படும் பசியானது, மற்ற வேளைகளில் அதிகமாக உண்ணத் தூண்டும். காலை உணவை தவிர்ப்பவர்களை விட அதனை சாப்பிடுகிறவர்களுக்கு பி.எம்.ஐ குறைவாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.
ஒரு கிண்ணம் நிறைய ஓட்சை நிறைத்து, அதில் பழங்கள் மற்றும் குறைவான கொழுப்பை கொண்ட பால் பொருட்களை சேர்த்து காலையில் சாப்பிட்டால் ஆரோக்கியமான நாள் தொடங்கும். சாப்பிடுவதற்கு 20 நிமிடம் என்று ஒரு நேரத்தை ஒதுக்கி மெதுவாக சாப்பிடுங்கள். இது டயட் மூலம் இல்லாமல் உடல் எடையை குறைக்க முதன்மையான வழியாகும். ஒவ்வொரு வாய் உணவையும் நிதானமாக மென்று சாப்பிட வேண்டும்.
தினமும் இரவு ஒரு மணிநேரம் கூடுதலாக தூங்கினால், ஒரு வருடத்தில் 7 கிலோ வரை உடல் எடை குறையும் என்று மிஷிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். இவரின் ஆராய்ச்சி படி, தூங்கும் போது உடல் எந்த வேலையிலும் ஈடுபடாமல் இருப்பதால், சுலபமாக 6 சதவீதம் வரை கலோரிகளை எரிக்கலாம். ஒவ்வொரு நாள் இரவும் ஒரே ஒரு காய்கறியை மட்டும் சாப்பிடுவதற்கு பதில் மூன்று காய்கறிகளை கலந்து சாப்பிடுங்கள். அதிக வகை இருந்தால் அதிகமாக சாப்பிட தூண்டும். அதனால் அதிகமான பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிட்டு உடல் எடையை குறைக்கலாம்.
ஒவ்வொரு உணவிற்கு முன்பும் சூப் குடியுங்கள். இது பசியை ஆற்றி குறைவாக உண்ண வைக்கும். கெட்டியான சூப்பை தவிர்க்கவும். ஏனெனில் அதில் அதிக கொழுப்பும், கலோரிகளும் அடங்கியிருக்கும். பிட்சா சாப்பிடும் போது மாமிசத்திற்கு பதில் காய்கறி களை தேர்வு செய்யுங்கள். இதனாலும் கூட 100 கலோரிகளை எரிக்க முடியும். சோடா போன்ற சர்க்கரை கலந்த பானங்களை பருகுவதற்கு பதிலாக, தண்ணீர் அல்லது கலோரிகள் அற்ற பழச்சாறுகளை பருகுங்கள். இதனால் ஒரு 10 டீஸ்பூன் அளவிலான சர்க்கரையை தவிர்க்கலாம்.
மதுபானத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தை விட, கலோரிகள் தான் அதிகமாக உள்ளது. அது ஒருவரது சுய கட்டுப்பாட்டை இழக்க வைப்பதால் சிப்ஸ், நட்ஸ் மற்றும் இதர நொறுக்குத் தீனியை அதிக அளவில் உட்கொள்ள வைக்கும். தினமும் 12 டம்ளர் க்ரீன் டீ பருகுவதால் கூட உடல் எடை குறையும். சீரான முறையில் யோகா செய்பவர்களுக்கு சாப்பிடுவதில் ஒரு மன கட்டுப்பாடு ஏற்படும்.
இயற்கையாகவே சிலர், ஒரு வாய் உணவிற்கும் அடுத்த வாய் உணவிற்கும் சிறிய இடைவேளை விடாமல் சாப்பிடுவார்கள். இந்த இடைவேளையில் பொறுமையாக இருங்கள், வேகமாக அடுத்த வாய் உணவை திணிக்காதீர்கள். பேசி கொண்டே பொறுமையாக தட்டை காலி செய்யுங்கள். இது வயிற்றை அடைக்காமல் பசியை போக்கும். நொறுக்குத் தீனி உண்ண தூண்டும் போது, சர்க்கரை இல்லாத வீரியம் அதிகமுள்ள சூயிங் கம்மை மெல்லுங்கள்.
உணவை நீண்ட நேரம் சமைத்தால், அதிலுள்ள ஊட்டச்சத்து அனைத்தும் வெளியேறிவிடும். போதுமான ஊட்டச்சத்து இல்லாத போது, சாப்பிட்ட திருப்தி உங்களுக்கு ஏற்படாது. ஆகவே முடிந்த வரை பச்சை காய்கறிகள் மற்றும் சாலட்களை சாப்பிட வேண்டும். அவித்த வேக வைத்த காய்கறிகள் மற்றும் மாமிசங்களை உட்கொள்ளுங்கள். குறிப்பாக மைக்ரோ ஓவனில் சமைப்பதை தவிர்க்கவும். சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு பழங்கள் சாப்பிட வேண்டும்.
இதனால் பழங்கள் வேகமாக செரிமானம் ஆகும். வெறும் வயிற்றில் பழங்களை உண்டால், உடலின் நச்சுத்தன்மை நீங்கி, அதிக ஆற்றல் கிடைத்து உடல் எடை குறையும். அதிக அளவில் சைவ உணவை உட்கொண்டால், அது உடல் எடை குறைய உதவி புரியும். அசைவ உணவை விட, சைவ உணவை சாப்பிடுகிறவர்கள் தான் வேகமாக ஒல்லியாவார்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பயறு வகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு காரணம் அதில் அடங்கியுள்ள நார்ச்சத்து.
இதில் முக்கியமானவை என்னவென்றால் 20 நிமிடங்களுக்கு 1 மைல் தூர நடை, 20 நிமிடங்களுக்கு தோட்டத்தில் களை எடுத்தல் அல்லது செடிகள் நடுதல், 20 நிமிடங்களுக்கு புல் தரையை ஒழுங்குபடுத்துதல், 20 நிமிடங்களுக்கு வீட்டை சுத்தப்படுத்துதல் அல்லது 10 நிமிடங்களுக்கு ஓடுதல். இரவு உணவை 8 மணிக்கு முன்பே சாப்பிட வேண்டும். இரவு உணவை முடித்ததும் மூலிகை தேநீர் பருகுங்கள் அல்லது பற்களை துலக்குங்கள். இதனால் உடல் எடையை குறைக்கும் பணியில் வெற்றிப் பெற போவது உறுதி.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home