உடல் இயக்கத்தை சீராக்கும் தண்ணீர்
நமது உடலின் உறுப்புகள் சீராக செயல்பட ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. உடலில் உள்ள ஒவ்வொரு இயக்கத்திற்கான பணியையும் சிறப்பாக செய்து முடிக்க தண்ணீர் இன்றிமையாதது.
குடிக்கும் தண்ணீரில் ஏலக்காய் தோலையோ, ஆரஞ்சுத் தோலையோ போட்டு வைத்தால், தண்ணீர் வாசனையாக இருப்பதோடு, அதில் கலந்துள்ள கண்ணுக்குத் தெரியாத கிருமிகளும் கொல்லப்படும். ஒரு சிறிய குட குடிநீரில் steri tabs மாத்திரை ஒன்று போட்டு, நீரைச் சுத்தப் படுத்தி, சாப்பிட்டால், வியாதிகள் சீக்கிரம் வராது. நீரை சூடுபடுத்தத் தேவையில்லை. ஒரு மாத்திரை போட்ட அரை மணியில் நீர் சுத்தமாகி, சுவையாக இருக்கும். சிரமமின்றி சுத்தப்படுத்தி அருந்தலாம்.
சாப்பிடுமுன்:
சாப்பிட உட்காரு முன், தேவையான அளவு சூடு செய்த தண்ணீரை ஒரு டம்ளர் குடிங்கலாம். அந்த மாதிரி, சாப்பிட்ட பின்னும் ஒரு டம்ளர் வெந்நீர் குடிங்க. அந்த வெந்நீர் வெது, வெதுப்பாக இருக்கக் கூடாது. அதுக்காக நாக்கைப் சுட்டுக்கவும் கூடாது. நாக்குப் பொறுக்கற சூடு, ஞாபகம் வைத்துக் கொள்ளவும். இந்த வெந்நீர் வைத்தியத்தில் பல ஆச்சர்யமான உண்மைகள் இருக்கு
1. சாப்பிடறதுக்கு முன்பு குடிக்கிற வெந்நீர் நம்ம வயிறு ஃபுல் ஆன மாதிரி ஒரு திருப்தியைக் கொடுக்கும். ஸ்வீட், காரம் என்று பிடித்த அயிட்டங்களை இப்படிப் பேச்சு வாக்கில் வளைச்சுக் கட்ட முடியாது. வடையோ, பாயாசமோ கொஞ்சம் சாப்பிட்டாலும் போதும்”னு சொல்ல வைக்கும் சக்தி வெந்நீருக்கு உண்டு..
2. அது மட்டுமில்லாம, இந்த வெந்நீர் வைத்தியம் பண்றதாலே நாக்குக் வழவழப்பு, வாய் துர்நாற்றம், தொண்டைக் கரகரப்பு, முகத்துல வர்ற பரு, கரும்புள்ளிகள் எல்லாம் மறைஞ்சுடும். உள்ளே சுத்தமா இருந்தா, வெளியேயும் சுத்தமா இருக்கலாம். இதுக்காகத் தான் அந்தக் காலத்தில் சுமங்கலி பிரார்த்தனை, திரி போன்ற சமயங்களில் சாப்பாட்டு இலைக்குப் பக்கத்திலே சுக்கைத் தட்டிப் போட்டு, வெந்நீரை வச்சுடுவாங்க.
3. நாம் தினமுமே இப்படி வெந்நீர் குடிக்கலாம். அவ்வாறு குடித்து வந்தால் உடல் சீரான இயக்கத்தோடு
செயல்பட்டு உடலும் ஆரோக்கியமாக இருக்கும்
-. அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home