16 March 2014

வாட்டர் ஹீட்டர் பொருத்த வந்தவர் பாத்ரூமில் கேமராவை பிக்ஸ் செய்து 8 மாதம் படம் பார்த்த எலக்ட்ரீசியன் கைது





வாட்டர் ஹீட்டர் பொருத்த வந்தவர் பாத்ரூமில் கேமராவை பிக்ஸ் செய்து 8 மாதம் படம் பார்த்த எலக்ட்ரீசியன் கைது.

இது அனைவருக்கும் குறிப்பாக பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை, திருவனந்தபுரம் அருகில் உள்ள முட்டாடா என்னும் இடத்தில் இரண்டு திருமணமான பெண்கள், அவர்களின் பிள்ளைகள் உள்ள வீட்டில்வாட்டர் ஹீட்டர் பொருத்த பக்கத்து வீட்டி எலக்ட்ரீசியனை அழைத்துள்ளார்கள்.

வாட்டர் ஹீட்டர் பொருத்த வந்தவர் ஹீட்டரில் உள்ள ஆல்டோ மீட்டரில் சிறிய கேமராவை பொறுத்தி அந்த கேமரா சிறிய ஏவி டிரான்ஸ்மிட்டர் வழியாக படங்களை அனுப்பியுள்ளது, இதை பக்கத்து வீட்டு எலக்ட்ரீசியன் கம்ப்யூட்டரோடு இணைத்து படங்களை பார்த்துக்கொண்டிருந்துள்ளான், இது கடந்த எட்டுமாதங்களாக நடந்து வந்துள்ளது, தற்போது அதை அந்த வீட்டில் உள்ளவர்கள் கண்டுபிடித்து காவல்துறையில் புகார் அளிக்க எலக்ட்ரீசியனை கைது செய்துள்ளனர், மேலும் பல வீடுகளில் இவன் ஹீட்டர் பொருத்தி உள்ளதால் அங்கேயும் இதே வேலையை செய்துள்ளானா என விசாரித்து வருகின்றனர்.

#அட
வீணாப்போனவனே, நம்பித்தானட உன்னை விட்டாங்க

உஷாரா இருங்க, சிறிய சிறிய கேமராக்கள் என அதி நவீனமாகியுள்ள உலகில் எந்த வேலையை செய்ய அனுமதித்தாலும் முழுவதுமாக சோதனை செய்யுங்கள். பலரையும் உஷார் படுத்த இதை ஷேர் செய்யுங்கள்.

காப்பாற்ற வேண்டும்.

-
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home