30 June 2014

நம்பினால் நம்புங்கள்


* நாடாப்புழு 8 மீட்டர் நீளம் வரை வளரும்.

*
முதலைகளிலே 23 இனங்கள் உண்டு.

*
மனிதனுக்கும் சிம்பன்சிக்கும் 96 சதவீத டிஎன்ஏக்கள் ஒன்றுபோலவே இருக்கின்றன. மொத்தம் 3 பில்லியன் டிஎன்ஏ லெட்டர்ஸ்!

*
தெளிவான இரவுப்பொழுதில், நகரத்தில் வாழ்வோர் ஏறக்குறைய 400 நட்சத்திரங்களைக் காண முடியும். கிராமப்புறங்களில் 1,200 நட்சத்திரங்கள் வரை காணக் கிடைக்கும். ஒளியே இல்லாத பகுதிகளில் இருப்பவர்கள் 3,500 வரை பார்க்க வாய்ப்புள்ளது.

*
சிங்கக் குட்டிகள் பிறக்கும்போது பார்வையற்றும், எதுவும் செய்ய இயலாத ஒரு குழந்தை போலவும்தான் இருக்கின்றன.

*
பாறைகளின் வயதை அதிலுள்ள கதிரியக்கத் தாதுக்களின் அளவைக் கொண்டே கணிக்கிறார்கள்.

* ‘
ஜெயன்ட் கோல்டன் கிரவுன் ஃப்ளையிங் பாக்ஸ்என்ற வவ்வால் பறக்கும்போது, 1.5 மீட்டர் அகலத்துக்கு உடலை விரிக்கும்.

*
சுண்டெலியின் ஆங்கிலப் பெயரானமவுஸ்சமஸ்கிருத மொழியிலிருந்தே தோன்றி யிருக்கிறது. இதன் மூலப்பொருள், ‘திருடன்’.

*
தவளைகள் அமைதியாகக் காட்சியளித்தாலும், ‘கன்னி பால்குணமுடையவை. சில வகை ஆண் தவளைகள், தேரைகளையே உணவாக்கும்.

* ‘
பால்ட் ஈகிள்வகை கழுகுகளுக்கு ஏறக்குறைய 7,200 இறகுகள் உண்டு.

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home