இலாபகரமான ஆடு வளர்ப்பு தொழில்...!
இந்தியாவில் இருந்து 80 சதவீத ஆட்டிறைச்சி இசுலாமிய நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் ஏற்றுமதியாகிறது. வெள்ளாட்டு இறைச்சி ரூ 300 க்கும், செம்மறியாட்டு இறைச்சி ரூ 200 க்கும் என்ற விலையில் தான் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. ஆனால் இந்த ஏற்றுமதியில் பெரிய அளவில் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள பணக்கார விவசாயிகளாலேயே ஈடுபட முடிகிறது. பத்து ஆடுகள், இருபது ஆடுகள் எல்லாம் வைத்திருப்பவர்களால் இத்தகைய ஏற்றுமதி சாத்தியமில்லை.
2007 கால்நடைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 15.4 கோடி ஆடுகள் உள்ளன. ஏறக்குறைய ஒரு கோடி கிராம மக்களுக்கு ஆடு வளர்ப்புதான் ஜீவாதாரமான தொழில். நாட்டிலேயே அதிகமான ஆடுகள் (2.15 கோடிகள்) ராஜஸ்தானில் உள்ளன. அதாவது மொத்த ஆடுகளின் தொகையில் இது மாத்திரம் 14%. தமிழகத்தில் 1.07 சதவீதம் மட்டும் தான் ஆடுகள் உள்ளன. உண்மையில் ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக உத்திர பிரதேசத்தில் நாட்டின் பத்து சதவீத ஆடுகள் உள்ளன. இந்தியாவில் பத்து ஆண்டுகளில் ஆடுகளின் எண்ணிக்கை இரட்டிப்படைந்திருக்க, எதிர் விகிதங்களில் மேய்ச்சல் நிலம் தொடர்ச்சியாக குறைந்தும் வருகிறது. குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையின் ஊதிப்பெருக்கப்பட்ட ‘வளர்ச்சி’யால் இது அதிகரித்துள்ளது.
மற்ற மாநிலங்களில் ஆடுகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 15% மட்டுமே அதிகரிக்க,
ராஜஸ்தானில் மாத்திரம் 27% அதிகரிக்கிறது. விவசாயத்திற்கோ இல்லை
நகரமயமாதலுக்கோ வழியில்லாத தரிசு நிலப்பரப்பு அதிகரிப்பால் இது
சாத்தியமாகிறது. விவசாயத்தை விட ஆடு வளர்ப்பு கட்டுபடியாகும் நிலையில்
இருப்பதால் எல்லா விவசாயிகளுமே இங்கு ஆடு வளர்ப்புக்கு மாறி வருகின்றனர்.
தரிசு நிலமே ராஜஸ்தானில் மேய்ச்சல் நிலமாகவும் பயன்படுகிறது.
இங்கு 60 சதவீத விளைச்சல் நிலமே தரிசாக மாறி விட்டது. கடந்த 50 ஆண்டுகளில் 40 முறை வறட்சியை சந்தித்துள்ள மாநிலம் இது. மொத்தமுள்ள 2.16 கோடி ஹெக்டேர் விளைச்சல் நிலத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான நிலப்பரப்பில்தான் விவசாயம் நடக்கிறது. செயற்கை உரங்களால் நிலம் மலடு தட்டிப் போவதும், நிச்சயமற்ற பருவநிலைகளும் சேர்ந்து ஆல்வார் போன்ற வளமையான பகுதிகளில் கூட ஆட்டு பண்ணைகளையும், கால்நடை விவசாயிகளையும் தோற்றுவித்துள்ளது. ஆல்வாருக்கருகில் உள்ள பலாடி தினசரி ஆட்டுச் சந்தையில் நடக்கும் ஒருநாள் வியாபாரம் ரூ 1.5 கோடி என்கிறார்கள்.
(வினவு கட்டுரையிலிருந்து )
-அஷ்ரப்இங்கு 60 சதவீத விளைச்சல் நிலமே தரிசாக மாறி விட்டது. கடந்த 50 ஆண்டுகளில் 40 முறை வறட்சியை சந்தித்துள்ள மாநிலம் இது. மொத்தமுள்ள 2.16 கோடி ஹெக்டேர் விளைச்சல் நிலத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான நிலப்பரப்பில்தான் விவசாயம் நடக்கிறது. செயற்கை உரங்களால் நிலம் மலடு தட்டிப் போவதும், நிச்சயமற்ற பருவநிலைகளும் சேர்ந்து ஆல்வார் போன்ற வளமையான பகுதிகளில் கூட ஆட்டு பண்ணைகளையும், கால்நடை விவசாயிகளையும் தோற்றுவித்துள்ளது. ஆல்வாருக்கருகில் உள்ள பலாடி தினசரி ஆட்டுச் சந்தையில் நடக்கும் ஒருநாள் வியாபாரம் ரூ 1.5 கோடி என்கிறார்கள்.
(வினவு கட்டுரையிலிருந்து )
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home